
, ஆளும் இரு திராவிட கட்சிகளையும் கிழித்தெறிந்துவிட்டார்.
“பழைய காலத்துல மன்னர்கள் இன்னொரு நாட்டுல படையெடுத்து போயி வெற்றி பெற்றுட்டா, அரசர்கள் அந்த நாட்டின் கஜானாவை கொள்ளையடிப்பாங்க. வீரர்களோ நாடிலுள்ள மக்களை, அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பாங்க.
அவங்களாவது அடுத்த நாட்டின் கஜானாவைத்தான் கொள்ளையடிச்சாங்க. ஆனா இங்கே இப்போ ஆளுறவங்க சொந்த நாட்டையே கொள்ளையடிக்கிறாங்க.
கொள்ளைன்னா எல்லாத்துலேயும் கொள்ளை. எல்லா லெவல்லேயும் கொள்ளை.
மத்த மாநிலங்களெல்லாம் நம்ம மாநிலத்தை பார்த்து சிரிக்கிறாங்க.” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.
ஆண்ட தி.மு.க., ஆளும் அ.தி.மு.க. என்றுதான் சொல்லவில்லையே தவிர ‘கொள்ளையடிக்கிறாங்க’ என்று பொத்தாம் பொதுவாக ரெண்டு இயக்கங்களையுமே கழுவிக் காயப்போட்டுவிட்டார் ரஜினி.