"ஓட்டுக்கு பணம் எங்கே?" தினகரனுக்கு எதிராக ஆர்.கே.நகர் மக்கள் கோஷம்...!

Asianet News Tamil  
Published : Apr 29, 2018, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
"ஓட்டுக்கு பணம் எங்கே?" தினகரனுக்கு எதிராக ஆர்.கே.நகர் மக்கள் கோஷம்...!

சுருக்கம்

RK Nagar people are protesting for Dinakaran

சென்னை, ஆர்.கே. நகரில் கோயில் விழாவில் கலந்து கொள்ள சென்ற டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு, பொதுமக்களில் சிலர் 20 ரூபாய் நோட்டைக் காண்பித்து ஓட்டுக்கு பணம் எங்கே? என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து, சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதனைத் தொடர்ந்து, தினகரன் வெற்றி பெற்றது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன. அதில், ஆர்.கே.நகர் மக்களுக்கு 20 ரூபாய் நோட்டு கொடுத்து ஓட்டுக்களை பெற்று தினகரன் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டன.

இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள கோயில் விழாவில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் சென்றார். அப்போது தினகரனுக்கு எதிராக அங்கு கூடியிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 20 ரூபாய் நோட்டைக் காண்பித்து, 10 ஆயிரம் ரூபாய் எங்கே? என்று கோஷமிட்டனர். 

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. டிடிவி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பியதை அடுத்து, பாதுகாப்பில் இருந்த போலீசார், தினகரனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு சிம்மசொப்பனம்..! கோட்டை விட்ட இபிஎஸ்... கொத்தாய் தூக்கிய விஜய்..!