திவாகரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதோ? சந்தேகம் எழுப்பும் தினகரன்!

 
Published : Apr 29, 2018, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
திவாகரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதோ? சந்தேகம் எழுப்பும் தினகரன்!

சுருக்கம்

Is Divakaran suffering from mental health? TTV Dinakaran

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். 

இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்றனர். 

இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டுக்கு பணம் தருவோம் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. சிலர் தோல்வியை மறைப்பதற்காக 20 ரூபாய் நோட்டுகளைக் காட்டுகின்றனர். சில ரவுடிகள் 50 பேர் கூடி இதுபோன்று செய்கின்றனர். 

திவாகரன் குறித்து பேசும்போது, திவாகரனுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவர் கூறுவதில் ஒரு சதவீதம் கூட உண்மை கிடையாது. அவருக்கு 2002 ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார். திவாகரன் கோபத்தில், விரக்தியில் பேசிகிறாரோ ஒழிய, அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம். என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கூறினார். 

மக்கள், ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக சுயேட்சையாக நின்ற என்னை வெற்றி பெற வைத்துள்ளார்கள். இதுவரை தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தலில் இரட்டையை இலையையும், உதயசூரியன் சின்னத்தையும் தோற்கடித்து சுயேட்சையை வெற்றி பெற வைத்துள்ளார்கள். 

20 ரூபாய் நோட்டுக்கு பணம் தருவோம் என்ற வாக்குறுதிகளை நானோ வெற்றிவேலோ கொடுக்கவில்லை. எங்கள் வெற்றியை பாதிக்க வேண்டும் என்பதற்காகவே இதனை செய்துள்ளனர். நாங்கள் அப்படி சொல்லவும் இல்லை.

அமைச்சர் ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு, ஜெயக்குமாரை ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்க சொல்லுங்கள் பார்க்கலாம். இடைத்தேர்தலின்போது, தினகரன் விரைவில் கயிலாங்கடைக்கு போய்விடுவார் என்று கூறினார். இப்போது, கயிலாங்கடைக்கு போகிறவங்க யார் இருப்பார்கள் என்று தினகரன் கூறினார்.

முன்னதாக, டிடிவி தினகரன், சென்னை ஆர்.கே.நகர் தொகுக்கு வருமபோது, அப்போது பொதுமக்களில் சிலர் 20 ரூபாய் நோட்டுகளைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், 20 ரூபாய் நோட்டைக் காண்பித்து ஓட்டுக்கு பணம் எங்கே? என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!