
தான் நினைத்தால் உடனடியாக பிரதமரை சந்திக்க முடியும் எனவும் ஆனால் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்து செல்ல ஆசைப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. தமிழக மக்களின் பிரதிநிதியான முதல்வரால் பிரதமரை சந்திக்கக்கூட முடியவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மேலும் காவிரி விவகாரத்தில் கடந்த காலங்களில் திமுக செய்த துரோகத்தை மறைக்கத்தான் தற்போது ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டுவருவதாக விமர்சித்தார்.