”மதுசூதனன்”னா பொட்டு வச்சுட்டு.. பொங்கல் சாப்பிடுவாருனு நெனச்சீங்களா..?

 
Published : Nov 30, 2017, 06:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
”மதுசூதனன்”னா பொட்டு வச்சுட்டு.. பொங்கல் சாப்பிடுவாருனு நெனச்சீங்களா..?

சுருக்கம்

rk nagar by election candidate madhusudhanan

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், எம்ஜிஆர் கட்சி தொடங்கியதிலிருந்தே அதிமுகவில் இருப்பவர்.

திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தொடங்கியதிலிருந்தே வடசென்னையின் பிரபல முகமாக இருப்பவர் மதுசூதனன். எம்ஜிஆர் கட்சி தொடங்கியதிலிருந்து தற்போது அதிமுகவின் உண்மை விசுவாசியாக உள்ளார்.

எம்ஜிஆர் காலத்தில் திமுகவின் சைதை கிட்டுவுக்கு போட்டியாக சைதை துரைசாமி உருவாக்கப்பட்டார். அதன்பின்னர் தான் ஆதிராஜாராம் போன்றோர் தலையெடுத்தனர்.

அதே காலக்கட்டத்தில், வடசென்னையில் மதுசூதனன் கோலோச்சிக் கொண்டிருந்தார். அதன்பின்னர்தான், வடசென்னையில் பாலகங்கா, சேகர்பாபு, ஜெயக்குமார், வெற்றிவேல் ஆகியோர் அடுத்தடுத்து கோலோச்சுகின்றனர்.

எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் கட்சி வந்தபிறகு, அவரது உண்மை விசுவாசியாக எதையும் செய்ய துணிந்தவராக உடனிருந்தவர் மதுசூதனன். ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவின் உறவினர்களான திவாகரன், தினகரன் போன்றோர் சஃபாரி போட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் அருகில் இருந்திருந்தாலும் தொண்டர்கள் பலத்தையும் ஆள் பலத்தையும் திரட்டி மெர்சல் காட்டியவர் மதுசூதனன் தான்.

அனைத்து வகையிலும் பக்கபலமாக இருந்ததால்தான், 1991 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மதுசூதனனை அமைச்சரவையில் இடம்கொடுத்து அவரை கைத்தறித்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. 

ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக்காலம் அராஜகங்களின் உச்சகட்டம் என அரசியல் விமர்சகர்கள், இதுவரை கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றவர்களில் ஒருவர் மதுசூதனன்.

சந்திரலேகா என்ற ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில், மதுசூதனின் பெயர் அடிபட்டதால், மதுசூதனனை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த வழக்கின் பின்னணி குறித்து இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

தராசு ஊழியர் படுகொலை, ப.சிதம்பரம் வாகனம் மீது தாக்குதல், அண்ணா பல்கலை. துணை வேந்தராக முனைவர் அனந்தகிருஷ்ணன் வீடு தாக்குதல், வழக்கறிஞர் விஜயன் மீதான தாக்குதல், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதான தாக்குதல் ஆகியவை 1991-96 ஆட்சிக்காலத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள். இவற்றை எல்லாம் செய்தது மதுசூதனன் மற்றும் ஆதிராஜாராம் ஆகியோரின் குரூப்தான் எனக் கூறப்பட்டது. 

பின்னர் ஒரு காலக்கட்டத்தில் ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டு பின்னர், மீண்டும் ஜெயலலிதாவால் கட்சியின் அவைத் தலைவராக்கப்பட்டவர் மதுசூதனன்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை வடசென்னையின் பிரபலமானவராக இருக்கும் மதுசூதனன் ஆர்.கே.நகரில் வெல்வாரா..? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!