ஒரு மாசத்துக்கு ரூ.1.20 கோடிக்கு காளான் சாப்பிடுகிறார் மோடி... பகீர் குற்றச்சாட்டு!

First Published Dec 13, 2017, 4:42 PM IST
Highlights
Ridiculously expensive mushrooms imported from Taiwan is the secret behind PM Modis fairness says Congress leader Alpesh Thakor


கறுப்பா இருந்த மோடி, பளபளன்னு ஆன ரகசியம் என்ன தெரியுமா? அவரு ரூ.80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காளானை வெளிநாட்டான தைவானில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிட்டு வருகிறார் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் அல்பேஷ் தகோர்.

எந்த தேதியில் பதிவானது என்று குறிப்பிடப்படாத ஒரு வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாக சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த வீடியோவில் குஜராத் ஓபிசி தலைவர் அல்பெஷ் தகோர், பொதுக்கூட்டமொன்றில் பேசுகிறார். அப்போது அவர், மோடிஜி தைவானில் இருந்து இறக்குமதி செய்யும் காளான்களை சாப்பிடுகிறார். ஒரு காளான் விலை மட்டும் ரூ.80 ஆயிரம் இருக்கும். இப்படி அவர் ஒரு நாளுக்கு ஐந்து காளான்களை சாப்பிடுகிறார். அவர் முன்னர் என்னைப் போல் கருப்பாகத்தான் இருந்தார். ஆனால் இப்போது நல்ல கலராக வெளுப்பாக மாறிவிட்டார். அதற்குக் காரணம் இறக்குமதி செய்யப்பட்ட காளான்கள்தான்... என்று பேசுகிறார். 

மேலும், அவர் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே இப்படி தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளானை சாப்பிடுகிறார்... என்று குற்றம் சாட்டியுள்ள தகோர், இவ்வாறு பிரதமர் மோடி, மாதத்துக்கு ரூ. 1 கோடி 20 லட்சம் அளவுக்கு காளான்களை சாப்பிடுகிறார். ஆனால் அவர் ரொட்டி சாவல் (ரொட்டி, அரிசி சாதம்) சாப்பிடுவதை விரும்புவதில்லை... என்று பேசியுள்ளார். 

ஏற்கெனவே,  பிரதமர் நரேந்திரமோடி அடிக்கடி வெளிநாடு பயணம் செய்கிறார் என்றும், அவர் அணியும் உடை அதிக விலையுள்ளது என்றும், செல்பி எடுப்பதில் ஈடுபடும் மோடி ஒரு விளம்பரப் பிரியர் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவரை விமர்சித்து வருகின்றனர். இப்போது லேட்டஸ்டாக  காளான் சாப்பாடு சேர்ந்துள்ளது. 

காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவரும், குஜராத் இட ஒதுக்கீடு போராட்டக்குழு தலைவருமான அல்பேஷ் தகோர் இவ்வாறு பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏழைகள் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். ஆனால், பிரதமருக்கு இவ்வளவு தொகை காளானுக்கு செலவிடப்படுகிறது. இதற்காக கட்சி தொண்டர்கள் எவ்வளவு செலவழிப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள் என்று  அவர் பேசியுள்ளார். 

40 வயதான அலபேஷ் தாகூர் குஜராத் தேர்தலில் பதான் மாவட்டம் ரதென்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே இது  அவரது தேர்தல் பிரசாரத்தின் போது பேசப்பட்ட கருத்துதான். ஆனால், எந்த தேதியில் என்பது குறித்து தகவல் இல்லை. 

click me!