
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன், தனது பிறந்தநாளை மக்களோடு மக்களாக கொண்டாடி மகிழ்ந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரன் தரப்பு பிரசார வியூகத்தைப் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் மிரண்டுபோய் உள்ளனர்.
தினகரன் பிரசாரத்துக்கு வருகிறார் என்றாலே, தாய்மார்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்துக்கும் 3 ஆயிரம் பேர் வரையில் மக்கள் கூடுகிறார்களாம். இவர்களுக்கான செலவுகள், ஆரத்தி செலவுகள், நிர்வாகிகளின் செலவுகள் ஆகியவற்றை கணக்கிட்டால் கோடிக்கணக்கில் செலவாகிறதாம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களே தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கூறி வந்தனர். இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ஜெயானந்த். அதேபோல் விவேக் தரப்பில் இருந்தும் தினகரனுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.
டிடிவி தினகரன் தனது 54-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக அவர், இன்று திருப்பதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து, திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளார். நேற்று ஆர்.கே.நகர் பிரச்சாரத்தின்போது, மக்களோடு மக்களாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.