அதிமுக மீது பழிவாங்குவது திமுக அரசுக்கே ஆபத்தாக அமையும்.. எச்.ராஜா எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Aug 20, 2021, 7:17 PM IST
Highlights

திமுகவின் 100 நாள் ஆட்சி, மிகப்பெரிய தோல்வி. தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று கூட நிறைவேற்ற முடியாத நிலையில் திமுக இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம், பெரியாரியவாதிகளை கோவிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டம். 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொடநாடு வழக்கில் இணைக்க முயல்வது போன்ற பழிவாங்கும் நடவடிக்கை திமுக அரசுக்கே எதிராக அமையும் என எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பதவியேற்ற 3 மாதங்களில் திமுக அரசு வாங்கிய கடன் 40,000 கோடி ரூபாய். இன்னும் 92,000 கோடி ரூபாய் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டை பார்த்தால் பொருளாதாரம் தெரிந்தவர்கள் போட்ட பட்ஜெட்டாக எனக்கு தெரியவில்லை என விமர்சனம் செய்துள்ளார். 

திமுகவின் 100 நாள் ஆட்சி, மிகப்பெரிய தோல்வி. தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று கூட நிறைவேற்ற முடியாத நிலையில் திமுக இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம், பெரியாரியவாதிகளை கோவிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டம்.  மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த சட்டம் ஐந்து நிமிடத்தில் நீதிமன்றத்தில் அடிபட்டு போகும் என்றார்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்வது, முன்னாள் முதலமைச்சரை கொடநாடு விவகாரத்தில்  சேர்ப்பது என இவை எல்லாமே திமுக அரசுக்கே ஆபத்தாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

click me!