அவரை ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்புங்கள்.. ஓவரா பேசிய ஓவைசியை ஓங்கி அடித்த அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2021, 6:21 PM IST
Highlights

 "இங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் குற்றங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று இவர்கள் (மையம்) கவலைப்படுகிறார்கள். 

ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் மக்களை காப்பாற்ற ஓவைசியைதான் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவேண்டும் என மத்திய அமைச்சர் ஷோப கரண்ட்லஜே விமர்சித்துள்ளார். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய பாஜக, ஆப்கனிஸ்தான் பெண்கள் குறித்து  கவலைப்படுகிறது என அசாதுதீன் ஓவைசி விமர்சித்து இருந்த நிலையில், ஷோபா கரண்ட்லஜே இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதை அடுத்து ஒட்டுமொத்த  ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் தீவிரம் கொண்ட  தலிபான்களின் ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு  வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.20 ஆண்டுகாலமாக சுதந்திரமாக இருந்த ஆப்கன் பெண்கள் மீண்டும் தலிபான்களால் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இந்நாட்டு பெண்களை அவர்கள் கட்டாயத் திருமணம் செய்து துன்புறுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக மலைகளிலும், குகைகளிலும் பதுங்கி இருந்த தலிபான்கள் பெண்களை பரவலாக தங்கள் இச்சைக்கு இரையாக்கி வரும் அவலங்கள் அரங்கேறி வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து வன்முறையில் ஈடுபடுவது, தங்களுக்கு சுவையாக உணவு சமைத்து தரும்படி கட்டாயப்படுத்தி பெண்களை தாக்குவது, 

தங்களின் பாலியல் இச்சைக்கு உடன் படும்படி அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கான தகவல்களும் ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது மட்டுமின்றி செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர்களையும் அவர்கள்  அச்சுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களும், பொதுமக்களும் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற  உயிர் பயத்தில் இருந்து வருகின்றனர்.அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக தலிபான்களின் அடக்குமுறையை குறித்து இந்திய அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, இந்தியாவில் சராசரியாக 9 பெண் குழந்தைகளில் 1 குழந்தை ஒரு வயயை எட்டும் முன்னரே உயிரிழந்து விடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இந்தியாவில் மிக மோசமாக உள்ளது.  சிறுமிகள் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. "இங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் குற்றங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று இவர்கள் (மையம்) கவலைப்படுகிறார்கள். அங்கு நடப்பதை காட்டிலும் இங்கே அதிகமாக நடக்கவில்லையா? " என அவர் கேட்டார். ஆப்கனிஸ்தான் பெண்கள் தொடர்பாக குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள பெண்களின் மீது மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய பெண்களுடைய நிலை என்ன என்பதை உணர வேண்டும் என அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். அசாதுதீனின் பேச்சுக்கு பல்வேறு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ஷோப கரண்ட்லஜேஇந்த அளவிற்கு பேசும் அசாதுதீன் ஓவைசியை ஆப்கனிஸ்தான் நாட்டிற்கு  அனுப்புவதே சிறந்ததாக  இருக்கும் என ஒரு வரியில் அசாதுதீன் ஓவைசிக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

 

click me!