முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்… திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்!!

By Narendran SFirst Published Nov 21, 2021, 11:49 AM IST
Highlights

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்துத் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நவம்பர் 21 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த் கூட்டத்தில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமு.க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  நடைபெற்றது.

தற்போது, திமுகவில் நாடாளுமன்ற மக்களவையில் 38 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த எம்.பி.க்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?, என்னென்ன பிரச்சினைகளை எழுப்பவேண்டும்? என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் திமுக நிலைப்பாடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் திமுகவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உறுப்பினர் பதவிக்கு 10,000 ரூபாயும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,500 ரூபாயும் விருப்ப மனு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த விருப்ப மனு விநியோக அறிவிப்பால் விரைவில் நகராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து, நீட் தேர்வு விவகாரம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், கொரோனா நிலவரம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!