சூர்யாவை வேற லெவலில் வைச்சு செய்யும் வன்னியர்கள்... விடாமல் மிரட்டும் அக்னிகலசம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 21, 2021, 11:31 AM IST
Highlights

இந்திய அளவில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தரமான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார்கள் வன்னிய சமுதாய மக்கள். 

இந்திய அளவில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தரமான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார்கள் வன்னிய சமுதாய மக்கள். 

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜெய் பீம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் உண்டாக்கியுள்ளது. படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் எதிர்மறைப் பாத்திரமான போலீஸ் அதிகாரியின் வீட்டில் இருக்கும் காலண்டரில் வன்னியர்களின்  சின்னமான அக்னி கலசம் இடம் பெற்றது என்பதால் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவிற்கு ஒன்பது கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். 

அதற்கு பதிலளித்து, அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதிய சூர்யா, எந்த உள்நோக்கமும் இல்லை; நான் என் வழியில் சமூக பணிகளைத் தொடர்கிறேன். நீங்கள் உங்கள் வழியில் சமூக பணிகளைத் தொடருங்கள் என்பது போல் குறிப்பிட்டிருந்தார். அந்த காட்சியில் காலண்டர் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட காலண்டரும், சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்தது. படம் வெளி வந்து இரண்டு வாரங்கள் ஆகியும் விவாதங்கள் தொடர்கின்றன. வன்னியர் சங்கம் சார்பில் ரூபாய் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 இப்படி இன்று வரை தொடர்ந்து வரும் விவாதத்தின் அடுத்த நிகழ்வாக, படத்தில் பங்காற்றியுள்ள எழுத்தாளர் கண்மணி குணசேகரன் 'எலி வேட்டை' என்ற பெயரில் தன்னிடம் படம் பற்றிக் கூறி, படத்தில் அந்த பகுதி மக்களின் பேச்சு வழக்குக்காகப் பணியாற்றச் செய்துவிட்டு, பின்னர் 'ஜெய் பீம்' என்ற பெயரை மாற்றி விட்டதாகவும், தான் அறியாமலேயே தான் சார்ந்த சமூகத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஒரு படத்தில் பணியாற்ற வைத்து விட்டதாகவும் மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ள எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தனக்கு சம்பளமாக அளிக்கப்பட்ட 50,000 ரூபாயை காசோலை வழியாக 2டி நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், #SuriyaHatesVanniyars என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். 

ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே உன் பின்னால் நின்றாலும்..
நீ மன்னிப்பு கேட்காமல்
உன் படம் திரையில் ஓடாது,
ஒட விடவும் மாட்டோம் சூர்யா

— Murugarajan Raju (@murugarajan1)

https://t.co/dW4k3SZ6BY

— Sakthivel Murugan (@sakthivelsp7)

ஜெய் பீம் படத்தின் கலை இயக்குனர் இவர்தானாம்.

ஆனால், நடிகர் சூரியாவுக்கு தெரியாமல் வன்னியர் வெறுப்பு காட்சிகள், திட்டமிட்டு திணிக்கப் பட்டிருக்க வாய்ப்பு இல்லை.

pic.twitter.com/udISM23mfP

— bhuvanesh kumar (@Bhuvanesh005)


வன்னியர் மீது வெறுப்பை உமிழும் சூரியா.. https://t.co/9KSCk3XQqz

— படையாட்சி (@padaiyatchi_)

🔥 எங்களுக்கு "தன்மானம்" தன் "இனம் " இரண்டுமே முக்கியம் அதை யாரு சீண்டி பார்த்தாலும்... 🔥 ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்..🔥 நாம் ஒற்றுமையாக pic.twitter.com/WAWcgOMsWE

— Prakash Muthusamy (@PrakashMuthusa5)

 

click me!