சசிகலாவுக்கு எதிராக புதிய அஸ்திரத்தை ஏவும் அதிமுக... தமிழகம் முழுவதும் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 17, 2021, 2:47 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்தை வாசித்தார். அப்போது, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதி இல்லாதவர். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சசிகலா, அவர் குடும்பத்தை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். 

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சசிகலாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக விளங்குகிறது.  இந்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா அதிமுகவில் மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பை அபகரிக்கும் நோக்கில் தொண்டர்களிடம் பேசி வருகிறார். 

இதனையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர் 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த தீர்மானத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட கழகங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த கட்சி நிர்வாகிகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். 

இதேபோல், விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் சசிகலா எதிராக அதிமுக தலைமை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து மாவட்ட நிர்வாகிகள் தீர்மானத்தை நிறைவேற்றினர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்தை வாசித்தார். அப்போது, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதி இல்லாதவர். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சசிகலா, அவர் குடும்பத்தை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். வலிவோடும், பொலிவோடும் பீடுநடை போடும் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில்  சசிகலா செயல்படுகிறார். உழைப்பைச் சுரண்டும் ஓட்டுண்ணிகளாக, நற்பெயரை அழிக்கும் நச்சு களைகளாக அதிமுகவை அபகரிக்கலாம் என வஞ்சக வலை விரிக்கின்றனர். 

அதிமுகவை அபகரிக்கப்போவதாக சசிகலா தொலைபேசியில் சிலருடன் பேசுவது வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். சசிகலா மற்றும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் அதிமுக தொண்டர்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. பின்னர், நிர்வாகிகள் ஆதவோடு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

click me!