ஒரு வழியாக வழிக்கு வந்த ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு!

By vinoth kumarFirst Published Jan 23, 2023, 7:46 AM IST
Highlights

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி ஒன்றிய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

ஆளுநர் மாளிகையின் சார்பில் அச்சிடப்பட்ட குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு மற்றும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசுடனான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக காசி தமிழ்சங்கத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி, தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். 

இதையும் படிங்க;- ஆர்.என்.ரவியை தரக்குறைவாக விமர்சித்த திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி! ஆளுநர் மாளிகை எடுத்த அதிரடி முடிவு

இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல்அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்தார். 

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி ஒன்றிய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநருக்கு எதிரான புகாரை வழங்கினர். இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று வந்த பிறகு தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து விளக்கமளித்திருந்தார். 

இதையும் படிங்க;-  தமிழக கட்சிகளை மீண்டும் சீண்டிய ஆர்.என்.ரவி.! பொங்கல் விழா அழைப்பிதல்.! தமிழ்நாட்டில் இருந்து தமிழகமாக மாற்றம்

இந்நிலையில். வரும் 26ம் தேதி  நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ்  தமிழ்நாடு அரசு முத்திரை, திருவள்ளுவர் ஆண்டு மட்டுமில்லாமல் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துரையாடலில் தமிழ்நாடு என்றே குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார் என்பது குறிப்பித்தக்கது. 

click me!