ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதியும் நடைபெற உள்ளது.
undefined
இந்நிலையில், கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஆகையால் இந்த தேர்தலில் தனது முழு பலத்தையும் நிரூபிக்க வேண்டிய காட்டாயத்தில் இருப்பதால் போட்டியிடும் அனைத்து கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்பதாலும் மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை கொண்ட 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களின் விவரம்
* கே.என்.நேரு
* எஸ்.முத்துசாமி
* எ.வ.வேலு
* கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
* தங்கம் தென்னரசு
* தா.மோ.அன்பரசன்
* அர.சக்கரபாணி
* மு.பெ.சாமிநாதன்
* வி.செந்தில்பாலாஜி
* ஆவடி சா.மு.நாசர்
* கயல்விழி செல்வராஜ்
* அந்தியூர் செல்வராஜ்
* கோவை நா.கார்த்திக்
* தளபதி முருகேசன்
* தொ.அ.ரவி
* க.வசந்தம் கார்த்திகேயன்
* தா.உதயசூரியன்
* சேலம் ஆர்.ராஜேந்திரன்
* டி.எம்.செல்வகணபதி
* எஸ்.ஆர்.சிவலிங்கம்
* என்.நல்லசிவம்
* இல.பத்மநாபன்
* பா.மு.முபாரக்
* தே.மதியழகன்
* கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்
* எஸ்.எம்.மதுரா செந்தில்
* பெ.பழனியப்பன்
* ஒய்.பிரகாஷ்
* திருப்பூர் செல்வராஜ்
* ஐ.பி.செந்தில்குமார்
* தடங்கம் சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளனர்.