ஆர்.எஸ்.எஸ் மூலம் மோடிக்கு வேட்டு.. ரஜினியின் நண்பரை பிரதமராக்க அதிரடி கடிதம்..!

By manimegalai aFirst Published Dec 18, 2018, 5:09 PM IST
Highlights

பிரதமர் மோடியை பதவியில் இருந்து அகற்றிவிட்டு நிதின் கட்கரியை நியமியுங்கள் என விவசாய சங்கத்  தலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸுக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்கட்சிகளை மிரட்டி வந்த மோடி அலை ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு மெல்ல உள் வாங்கிக் கொண்டு உட்கட்சியினரையே உசுப்பேற்ற வைத்துள்ளது. பிரதமர் மோடியை பதவியில் இருந்து அகற்றிவிட்டு நிதின் கட்கரியை நியமியுங்கள் என விவசாய சங்கத்  தலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸுக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

வாஜ்பாய் சகாபதம் முடிந்து அத்வானி கோலோச்சுவார் என நினைத்த நேரத்தில் அலையாய் பொங்கி எழுந்து பிரதமராக சிம்மாசனத்தில் அமர்ந்தார் மோடி. இன்னும் சில ஆண்டுகளுக்கு நம்மை யாராலும் அசைக்க முடியாது என அவர் போட்டிருந்த கூட்டல் கணக்கை கந்தாலாக்கி விட்டுப்போயிருக்கிறது ஐந்து மாநில சடமன்றத் தேர்தல் நிலவரம். இதனை வைத்து எதிர்கட்சிகள்தான் ஏளனம் செய்து வருகிறது என்றால் உள்கட்சிக்குள்ளும் மோடியின் இடத்தை பிடிக்க காய் நகர்த்தி வருகிறார்கள் அடுத்த கட்ட தலைவர்கள். அதில் முந்திக் கொண்டு நிற்பவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. 

இந்த நிலையில் விவசாய மேம்பாட்டுக்கான மஹாராஷ்டிர மாநில அரசால் வி.என்.எஸ்.எஸ்.எம் குழு தலைவராக உள்ள கிஷோர் திவாரி ’’பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்றிவிட்டு நிதின் கட்கரியை நியமியுங்கள்’’ என ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதம் மோடி அலையை அதிர்ச்சி அலையாய் மாற்றி இருக்கிறது. 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி ஆகிய இருவருக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’’தீவிரப்போக்கு மற்றும் சர்வாதிகார மனப்பான்மையை கடைபிடிக்கும் தலைவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஆபத்தானது. இதற்கு முன்னும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வரலாறு மீண்டும் திரும்பக்கூடாது என்றால் 2019-ம் ஆண்டு தேர்தலில் தலைமை பொறுப்பில் இருந்து மோடியை நீக்கிவிட்டு நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும்’’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நிதின் கட்கரி. அதே மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜோஷி. இந்தக் கடிதம் நிதின் கட்கரியின் தூண்டுதலால் எழுதப்பட்டதாக கூறுகிறார்கள். ரஜினியுடன் எப்போதும் நட்புடன் தொடர்பில் இருப்பவர் கட்கரி. கட்சியையும் தாண்டி பல ஆண்டுகளாக நட்பு பாராட்டி வருபவர். இந்நிலையில் தன்னை பிரதமர் வேட்பாளராக்க உதவ வேண்டும் என ரஜினி மூலம் அவர் காய் நகர்த்தி வந்த தகவல்களும் உண்டு. இந்த நிலையில் கிஷோர் திவாரி எழுதிய கடிதமும் மோடிக்கு எதிராக நிதின் கட்கரி காய் நகர்த்தி வருவதை வெளிப்படுத்தி இருக்கிறது. 

ஆக, மொத்தத்தில் மோடிக்கு பதிலாக பிரதமர் வேட்பாளராக ரஜினியின் நண்பர் கட்கரி காய் நகர்த்தி வருகிறார்.     

click me!