தேசிய கொடியை அகற்றி... திமுக கொடியை ஏற்றி... குப்புறக்கவிழ்ந்த திமுக தொண்டர்கள்..!

By Thiraviaraj RMFirst Published May 5, 2021, 1:03 PM IST
Highlights

திமுகவினரின் மற்றொமொரு செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

நேற்று சென்னை ஜெ.ஜெ நகரில் 'அம்மா உணவகம்' தி.மு.க'வினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளியோர் சாப்பிடும் அந்த உணவகத்தை தி.மு.க'வினர் அடித்து உடைத்தது பற்றி பல்வேறு கண்டன குரல்கள் எழுந்ததை தொடர்ந்து அந்த இருவர் மீதும் தி.மு.க நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் திமுகவினரின் மற்றொமொரு செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில், தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றனர். ஓட்டு எண்ணிக்கையின்போது, கோவை கிணத்துக்கடவு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் மற்றும் தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். மாலையில், தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். அவர் வெற்றி பெற்று விட்டார் என, தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து, தி.மு.க.,வினர் சிலர், கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து, அவர்கள், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் உள்ள தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில், தி.மு.க., கட்சிக் கொடியை பறக்க விட்டனர். ஓட்டு எண்ணிக்கை முடிவில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இச்செய்தி அறிந்த தி.மு.க.,வினர் கட்சிக் கொடியை அகற்றினர். கட்சியினர் கொடி ஏற்றியதை படம் எடுத்த சிலர், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியை ஏற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

click me!