அம்பலப்படுத்திய இபிஎஸ், அண்ணாமலை.. கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகளுக்கு ரூ.50,000 நிவாரண தொகை ரத்து.!

By vinoth kumar  |  First Published May 17, 2023, 11:29 AM IST

 இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்துலேயே  குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுகவின் விடியா அரசு தான் என கடுமையாக விமர்சித்திருந்தார். 


செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் மரணங்களில் தொடர்புடைய அமாவாசைக்கு அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50,000 நிவாரண உதவி அறிவித்தது. இந்நிலையில், கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரும் கள்ளச்சாராயம் குடித்திருந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கியதாகக் தகவல் வெளியானது. 

Latest Videos

இதை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி  போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு  இந்த அரசு  அதை போலி மதுபானத்தால் பாதிக்கபட்டவருக்கு வழங்கப்படும்  50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது, இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்துலேயே  குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுகவின் விடியா அரசு தான் என கடுமையாக விமர்சித்திருந்தார். 

அதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார். கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை. அவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு என்று கடுமையாக சாடியிருந்தார். 

இந்நிலையில், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் மரணங்களில் தொடர்புடைய அமாவாசைக்கு அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

click me!