மீதியிருக்கும் காலத்திலாவது மக்களுக்கு நல்லது செய்யுங்கள் - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் அறிவுரை

By Velmurugan s  |  First Published May 17, 2023, 10:08 AM IST

தமிழகத்தில் மதுவால் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக மீதமுள்ள காலத்திலாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


ஒரு டிடிவியும், ஒரு ஓபிஎஸ் இணைந்ததற்கு இப்படி ஏன் பதறுகிறார்கள்? நேற்று ஒரத்தநாட்டில் மேடையில் டிராமாவில் பத்மாசுரன் வேஷம் போட்டு ஆடுவது போல ஆடுகிறார்கள். பழனிச்சாமிக்கு நான் சொல்வதெல்லாம் நானும்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள் இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்திருந்தோம். அம்மாவிற்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓய மாட்டோம்.

பணம் மூட்டையோடு திரிபவர்களை வீழ்த்தி அம்மாவின் இயக்கத்தை அம்மாவின் தொண்டர்களிடம் ஒப்படைப்போம். அம்மாவின் இயக்கம் இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகளின் கையில் சிக்கியுள்ளது. பண பலத்தை மட்டும் நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டெடுக்கும் பொறுப்பு என்னிடமும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சிடமும் தொண்டர்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை நாங்கள் நிச்சயம் உறுதியாக நிறைவேற்றிக் காட்டுவோம்.

Tap to resize

Latest Videos

undefined

திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றவில்லை திமுக ஆட்சிக்கு 60 மாதங்களில் வரக்கூடிய எதிர்ப்பு 24 மாதங்களில் வந்து கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகள் பழனிச்சாமியின் துரோக ஆட்சியை பிடிக்காமல் மக்கள் திமுக ஆட்சியை உருவாக்கினார்கள். திமுகவுடைய பீ டீம் நான் இல்லை. நான் நடுநிலையாக நியாயமாக பேசுபவன். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் குருவியைப் போல 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது பழனிச்சாமி அன்று தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி இருந்தால் இன்று திமுக முதலமைச்சரை பார்த்து கேள்வி கேட்பதற்கு அருகதை இருந்திருக்கும்.

தமிழக அரசாங்கத்தின் காவல்துறையின் மெத்தன போக்கால் 10க்கும் மேற்பட்ட உயிர்கள் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் நடக்காமல் தடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது போதை கலாசாரத்தால் மாணவர்கள் உட்பட அனைவரும் சீரழியும் நிலை உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் விதமாக ஆட்சிப் பொறுப்பில் மீதி இருக்கும் காலத்திலாவது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை. அதுதான் அமமுகவின் கோரிக்கை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் டிஆர்பி ராஜா

ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது வட தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் 10.5% இட ஒதுக்கீடு அரசாணை அறிவித்தது போல  ஈபிஎஸ்சுடன் இருக்கும் கட்சிக்காரர்களை ஏமாற்றுவதற்குதான் தேர்தல் ஆணைய உத்தரவுகள் பயன்படும். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு என்பது தான் இறுதியாக உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதன்படி ஓபிஎஸ் இந்த வழக்கில் வெற்றி பெறுவார் என்பது உறுதி. தற்போதைய தீர்ப்பு இடைக்கால தீர்ப்பு தான். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பது போல அம்மாவின் தொண்டர் அம்மாவின் தொண்டர்கள் ஆதரவோடு ஈபிஎஸ்சின் பண பலத்தை வீழ்த்துவோம்.

தன்னால் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் விட்டு கொடுத்தார். அவர் நீக்கப்பட்டதற்கு பின்பு வேறு வழியில்லாமல் போராடினார். நாங்கள் சுயநலத்துக்காக இணையவில்லை. அமமுக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு இணைந்து அம்மாவின் இயக்கத்தை  மீட்டெடுப்போம். அதுதான் எங்கள் நிலைப்பாடு.

Crime News: பள்ளிப்பருவ காதலால் பொதுத்தேர்வு எழுதிய மாணவன் தலை துண்டித்து கொடூர கொலை

அமமுக தொடங்கி ஆறு வருடம் ஆகின்றது. ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை 28 மாவட்டங்களில் ஓபிஎஸ் நிர்வாக அமைப்புகளை உருவாக்கியுள்ளார். நாங்கள் சிபிஐ சிபிஎம் போல செயல்படுவோம் என ஏற்கனவே கூறியுள்ளோம். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுத்த பிறகு ஒத்த மனதோடு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்றார்.

click me!