24 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிடு.. இல்ல, பகிரங்க மன்னிப்பு கேள்.. அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு

By Ezhilarasan BabuFirst Published Oct 20, 2021, 2:22 PM IST
Highlights

அதிக அளவில் குஜராத் தான் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் மாநிலமாக உள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளது என்றார். அதேபோல் மின் வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 

எந்த ஆதாரமும் இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை அவதூறு பரப்பி வருகிறார் என்றும், அப்படி மின்வாரிய துறையில் முறைகேடு நடந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் அவர் வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கெடு விதித்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைச் சேர்ந்த  மின் உற்பத்தி செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தை தமிழ்நாடு மின்வாரியம் கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த நிறுவனத்திடமிருந்து அதிக அளவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்ய படவுள்ளது. அதில் அந்நிறுவனத்திடம் 4000 முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் நடைபெற உள்ளது. தற்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்நிறுவனத்தை திமுக முக்கிய பிரமுகர் வாங்கி, அதில் அதிக தொகைக்கு கொள்முதல் நடைபெறுள்ளது. திமுக முக்கிய புள்ளி இதில் லாபம் அடைய முயற்சிகள் நடந்து வருகிறது. தற்போதைக்கு அது எந்த நிறுவனம் என்று சொல்ல மாட்டேன், அது தொடர்பான ஆவணங்களை விரைவில் வெளியிடுவேன் என எச்சரித்திருந்தார். 

இதையும் படியுங்கள்: சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சின்னம்மா தலையில் இடி இறக்கிய எடப்பாடி.

இந்நிலையில்  சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பருவமழை காலத்தில்  முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பருவமழை தொடங்க உள்ள நிலையில், எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே பருவமழை காலத்திலும் சீரான மின் வினியோகத்தை வழங்கும் அளவுக்கு மின்சார துறை தயாராக இருக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் மின் தடை இருந்துவரும் நிலையில், தமிழகத்தில் மின் தடை இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். வெளிச்சந்தையில் இருந்து மொத்த தேவையில் நாம் வெறும் 1.04 சதவீதம் கொள்முதல் செய்கிறோம், அதுவும் நிலக்கரி பற்றாக்குறையினால் தான் என்றார். 

இதையும் படியுங்கள்: டாஸ்மாக்கை மூடினால் இதுதான் நடக்கும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பயங்கர விளக்கம்.

அதிக அளவில் குஜராத் தான் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் மாநிலமாக உள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளது என்றார். அதேபோல் மின் வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த ஆதாரங்களை எப்போது, எங்கு வெளியிட்டாலும் அங்குதான் வர தயார் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி தம்மிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் அவர் வெளியிட வேண்டும், அப்படி இல்லை என்றால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி  கால அவகாசம் வழங்கியுள்ளார். தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ளவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்று  அண்ணாமலையை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்தார்.

 

click me!