#Fishermans சொன்னதை செய்த செந்தில் தொண்டமான்!! இலங்கை சிறையிலிருந்து 23 தமிழக மீனவர்கள் விடுவிப்பு..

By Kanmani PFirst Published Nov 15, 2021, 2:32 PM IST
Highlights

இலங்கை கடற்படையால் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.  விடுதலையான மீனவர்களை செந்தில் தொண்டமான் சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவது தொடர் கதையாகி வருகிறது . அந்த வகையில் கடந்த மாதம் 13ஆம் தேதி தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து 23 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 23 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களுடைய இரண்டு படகளையும் பரிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 தினங்கள் காரைநகர் கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து தமிழக மீனவர்களை  விடுவிக்க தமிழக அரசும் , மீனவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு இலங்கை பிரதமரின் செயலாளர் செந்தில் தொண்டமானை நேரில் சந்தித்து மீனவர்கள் கோரியிருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று  சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தீபாவளி திருநாளுக்கு புத்தாடை இனிப்புகளை வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் செந்தில் தொண்டமான் உறுதி அளித்ததுடன் தமிழக மீனவர் சங்கத் தலைவர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார். அவ்வாறு உறுதி கூறும் விதமாக செந்தில் தொண்டமான் மீனவர்களை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

"

அவர் கொடுத்த உறுதியின் அடிப்படையில் மீனவர்கள் 23 பேரும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அனைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் இருபத்தி மூன்று பேரும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதோடு எல்லை தாண்டியதற்காக தலா ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும் ஓரிரு தினங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க  இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

click me!