ஹெச்.ராஜாவின் பதிவு கீழ்த்தரமானது! மு.க.ஸ்டாலின் காட்டம்!

First Published Apr 18, 2018, 2:38 PM IST
Highlights
Registration of HR Raja is bad - MK Stalin


பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்களுக்கு பதில் கூறி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் சர்ச்சை கருத்துக்களைக் கூறி, சிக்கிக் கொள்வதில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு நிகர் அவரே. அப்படி
சர்ச்சைகளுக்கு புகழ் பெற்ற ஹெச்.ராஜா, மீண்டும் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்க கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அடிபட்டிருப்பதால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு
ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். 

இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி
உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, நிர்மலா தேவியை யாரென்றே தெரியாது எனக் கூறியிருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதில் சிலவற்றுக்கு
கோபமாகவும், சிலவற்றுக்கு சிரித்துக்கொண்டும் ஆளுநர் பதிலளித்தார்.

இந்த நிலையில், ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினராக்கிய
தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டதுபோல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா? மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா
நினைவு வந்து பயமுறுத்துமே என்று பதிவிட்டிருந்தார்.

ஹெச்.ராஜாவின் இந்த பதிவு திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவு மிகவும் கீழ்த்தரமானது என்றும், ஹெச்.ராஜாவுக்கு எதிராக
பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கனிமொழியை தரக்குறைவாக டுவிட்டரில் விமர்சித்ததாக ஹெச்.ராஜாவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம் செய்து வருகின்றனர். கிண்டி
ரேஸ்கோர்சில் ஹெச்.ராஜா உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, இதுபோன்ற தரம் தாழ்ந்த பேச்சுகளுக்கு பதில் கூறி எனது நேரத்தை வீணாக்க
விரும்பவில்லை என்று கூறினார்.

click me!