மதுவிலக்குக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி போராடினால் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்குக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி போராடினால் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை திறந்திருக்கும் போதே கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது. குடியிருப்புகளுக்கு சென்றே விநியோகம் செய்யக்கூடிய நிலை இருந்திருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளச்சாராய விவகாரம் எதிரொலி: டாஸ்மாக் இயக்குநர் உள்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
மது விற்பனையை அரசே கண்டும் காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் சந்தித்து பேசி இழப்பீடு வழங்கி உள்ளார். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவே அரசு மது விற்பனையை அனுமதிக்கிறது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. கள்ளச்சாராயம் விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது.
இதையும் படிங்க: கள்ளசாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை கோரிக்கை
படிப்படியாக அமல்படுத்த முடியும். மேலும், நாங்கள் கூட்டணி கட்சிதான், நாங்கள் மதுவிலக்கு வேண்டும் என குரல் கொடுக்கிறோமே. எதிர்க்கட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார். மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது இருக்கட்டும். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி மதுவிலக்கை நடைமுறைப்படுத்தச் சொல்லி போராட்டம் நடத்தினால், அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.