ஒரு தலித்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் ஆதரிக்க தயார்.. பிராமண சங்க தலைவர் நாராயணன் அதிரடி அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2022, 12:10 PM IST
Highlights

ஏன் சில காட்சிகளில் அவர்களுக்கு பதவிகளை கொடுக்கப்படுவதில்லை? ஏன் அரக்கட்டளைகளில் கூட தலித்துகளுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. ஏன் அப்படி ஒருவரை தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினால் ஒட்டுமொத்தமாக பிராமணர்கள் அவர்களை ஆதரிக்க தயார்? இதை ஏற்கனவே நாங்கள் மேற்குவங்கத்தில் செய்து காட்டி இருக்கிறோம், பிராமணர்கள் எல்லாம் ஒன்றுகூடி மாயாவதி அவர்களையும் முதல்வராகி காட்டினோம்,

தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சராக வருவதை பிராமணர் சங்கம் ஏற்கிறது அப்படி ஒருவரை நிறுத்தினால் அதை நாங்கள் ஏற்க தயார் என பிரமணனர் அச்சங்கத்தின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழகம் பெரியார் மண் சமூகநீதி மண் என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் இதுவரை ஒரு தலித்  தமிழகத்தில் முதல்வராக முடியவில்லையே ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வட இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதியை  முதல்வராக்கியதில் பிராமணர்களுக்கு பெரும் பங்குண்டு, அதை ஏற்கனவே பிராமண சமுதாயம் நிரூபித்துக் காட்டி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தலித் வெறுப்பு:-

பல ஆயிரம் ஆண்டுகளாக அதிகாரத்திற்கு தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருகிற ஒரு சமூகம் என்றால் அது தலித்- பழங்குடியினர் சமூகமாகவே இருக்கும். அதிலும் ஒருவருக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர் எந்த அளவிற்கு போராட வேண்டும்  என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை கூறலாம். அப்போதிருந்தவர்களை காட்டிலும் அதிகம் படித்து இருந்தோம், பேரறிவாற்றல் கொண்டிருந்தும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததார் என்பதற்காக சாதி இழிவு அவர்மீது உமிழப்பட்டது. பல இடங்களில் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பது  வரலாறு. அதுபோலத்தான் சுதந்திரம் கிடைத்து ஒரு நூற்றாண்டில் நெருங்க உள்ள நிலையிலும் தலித் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, அரசியல் அதிகாரமும் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: ராமதாஸ் அடாவடித்தனம் பண்ணாதீங்க.. சூர்யாவை சீண்டாதிங்க.. பாமகவை டார் டாராக கிழித்த சவுக்கு சங்கர்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தலித் விரோதப் போக்கு, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை பரவலாக இருந்து வருகிறது. தலித் மக்கள் அரசியல் வயப்பட்டு விடக்கூடாது. அவர்கள் கல்வியில் விழிப்புணர்வு அடைந்து விடக்கூடாது என்ற வெறுப்புணர்வு தமிழகத்தில் மேலோங்கியுள்ளது. ஆண்ட சாதி பெருமை பேசி தலித்துகளை அவமதிக்கும் செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மாற்று சமூகப் பெண்ணை காதலித்தால் ஆணவ படுகொலை செய்யப்படும் அவலம் இங்கு அரங்கேறி வருகிறது. தலித் கட்சிகளாக இருந்தால் அவர்களுக்கு பொது சமூகத்தின் ஆதரவு ஓட்டுக்கள் கிடையாது,  ஒரு பெரும் கட்சியில் தலித் போட்டியிட்டால் சொந்த கட்சிக்குள்ளாகவே புறக்கணிப்பு வேலைகள் அரங்கேறுகிறது, பெரும்பாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படும் பதவிகள், பொறுப்புகள் அனைத்தும் அடையாளச் சின்னங்களாகவே இருக்கிறது.

சாதித்த மாயாவதி:- 

இதையெல்லாம் தாண்டி மாயாவதியின் வருகை என்பது இந்திய அரசியலில் ஓர் அதிசயம் என்றே கூறலாம், மாயாவதி மீது அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் அவர் முதல்வராவதற்கு முன்பு வரை தலித் மக்களின் மீதான அடக்குமுறை ஒடுக்குமுறை எண்ணிலடங்காதவை. ஒரு தலித் சாதாரணமாக காவல்துறைக்கு  புகார் கொடுக்கச் சென்றாலும் கூட புகார் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டீர்களா என காவல் நிலையத்தில் வைத்து அவர்களின் கை கால்களை  முறிக்கும்  சம்பவங்களும் அரங்கேறி வந்தது. ஆனால் அவர் முதல்வரான பிறகுதான் தலித் மக்கள் அங்கு மனிதர்களாவே மதிக்கப்பட்டனர், காவல் நிலையத்தில் புகார்கள் பெறப்பட்டன என்றால் அது மிகையல்ல. 

சமூக நீதி மண்.??

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து உள்ள தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏன் தமிழ்நாட்டில் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாட்டில் சமூக நீதிமண், அனைத்து சாதியினரும்  அர்ச்சகராகலாமென என்னென்னமோ பேசப்படுகிறது, ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை எல்லா சமூகத்திலும் ஒருவர் முதல்வர் ஆகிவிட்டார், பிராமண சமூகத்தில் இருந்து, ரெட்டியார் சமூகத்திலிருந்து, முக்குலத்தோர் சமுதாயத்தில் இருந்து, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்திலிருந்து என அனைவரும் முதல்வர் ஆகி விட்டார்கள். ஆனால் இதுவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட தமிழ்நாட்டின் முதலமைச்சராக முடியவில்லை.  இது சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொல்லிக்கொள்கிறோம், பெரியாரை எல்லோரும் மதிக்கிறோம், அவர் புரட்சிகரமான கருத்துக்களை எல்லாம் கூறி இருக்கிறார். ஆனால் இந்த மண்ணில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதையும் படியுங்கள்: Surya's ET : ஜெய்பீமை தொடர்ந்து எதற்கும் துணிந்தவனை மிரட்டுவதா.? பாமகவை புரட்டி எடுத்த எழுத்தாளர் சங்கம்!

பட்டியல் இன முதல்வர்- ஏற்க தயார்.

ஏன் சில காட்சிகளில் அவர்களுக்கு பதவிகளை கொடுக்கப்படுவதில்லை? ஏன் அரக்கட்டளைகளில் கூட தலித்துகளுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. ஏன் அப்படி ஒருவரை தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினால் ஒட்டுமொத்தமாக பிராமணர்கள் அவர்களை ஆதரிக்க தயார்? இதை ஏற்கனவே நாங்கள் மேற்குவங்கத்தில் செய்து காட்டி இருக்கிறோம், பிராமணர்கள் எல்லாம் ஒன்றுகூடி மாயாவதி அவர்களையும் முதல்வராகி காட்டினோம், தலித்துகள், பிராமணர்கள், இஸ்லாமியர்கள் மூன்று சமூகத்தினரும் சேர்ந்துதான் அவரை முதல்வர் ஆக்கினார்கள். மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணியாக அவர் முதல்வராக கோலோச்சினார். ஆனால் தமிழ்நாட்டில் அதையெல்லாம் தவிர்த்து விட்டு பிராமணர்களை மட்டும் பூச்சாண்டி காட்டுகின்ற வேலை நடக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் இந்த தலைமுறையினர் மத்தியில் எடுபடாது என அவர் கூறியுள்ளார். 

 

click me!