3வது அலையே வந்தாலும் எதிர்கொள்ள தயார்... மதுரையில் மாஸ் காட்டிய மா.சுப்பிரமணியன்..!

By vinoth kumarFirst Published May 14, 2021, 5:36 PM IST
Highlights

முதல் அலையின்போது மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் 2ம் அலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியள்ளார்.

முதல் அலையின்போது மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் 2ம் அலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியள்ளார். 

மதுரையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக்கு கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ;- மதுரையில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதல் படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துவ வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையில் 1281 படுக்கைகள் உள்ளன. 1176 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன. 

மதுரையில் நாள்தோறும் நோயாளிகளின் தொற்று அதிகரிக்கப்படுவதால் 150 படுக்கைகளைக் கொண்ட புதிய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் செய்யப்படும். ஒரு வார காலத்திற்குள் அந்த படுக்கைகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும். மதுரைக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து 500ல் இருந்து 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவர் மருந்துகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

முதற்கட்டமாக 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கசிவு காரணமாக 3 அல்லது 4 நாட்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் இன்று வெளிமாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜனை கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெரிய அளவிலான பாதிப்புகள் வராது. 3ம் அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு மட்டுமே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் என்ற எண்ணம் மக்களிடமும் வந்துள்ளதால், லாக்டவுனுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்றார்.

click me!