ராகுலுடன் காதல்...?? பிரியங்காவை புறக்கணித்த இளம் பெண் எம்எல்ஏ...!! யாருங்க அந்த எம்எல்ஏ...???

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2019, 4:41 PM IST
Highlights

பிரியங்காவின் நிகழ்ச்சியை அதிதி சிங் புறக்கணித்தது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்காவின் நிகழ்ச்சியை அதிதிசிங்  திட்டமிட்டே புறக்கணித்ததாகவும், ராகுலுடன் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாகவும் விமர்சித்து வருகின்றனர். 

ராகுலுடன் காதலில் இருக்கிறார், அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார், என்று கிசுகிசுக்கப்பட்டு  வந்த  ரேபரேலி சட்டமன்ற உறுப்பினர் அதிதி சிங் பாஜகவுக் தாவபோகிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் அதிதி சிங், இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஆவார்.  காந்தி குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்த அகிலேஷ் சிங் என்பவரின் மகள்தான் அதிதி சிங்.  சமீபத்தில் இவருக்கும் ராகுல் காந்திக்கும் இடையே காதல்  இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்றும் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. ஆனால்  ’ராகுலுடன் காதல் இல்லை’ என்று, சில மாதங்களுக்கு முன்பு மறுப்பு தெரிவித்திருந்தார் அதிதிசிங். இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்ட பேரணி ஒன்று நடைபெற்றது,

அந்த பேரணியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த அதிதிசிங் அன்று நடைபெற்ற உத்தரபிரதேச சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில் பிரியங்காவின் நிகழ்ச்சியை அதிதி சிங் புறக்கணித்தது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்காவின் நிகழ்ச்சியை அதிதிசிங்  திட்டமிட்டே புறக்கணித்ததாகவும், ராகுலுடன் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாகவும் விமர்சித்து வருகின்றனர். விரைவில் அவர் பாஜகவில் இணையப் போவதாகவும் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவை அதிதி சிங் வெகுவாக பாராட்டியிருந்தார், என்ற காரணத்தை சுட்டிக்காட்டும்  காங்கிரசார் அதிதி சிங், பாஜகவில் இணைய உள்ள தைரியத்தில்தான்  பிரியங்காவை அவமதித்துள்ளார் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிதி பாஜகவிற்கு தாவினால் அது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாகி விடும் என்பதால் அவரை காங்கிரஸ் அவ்வளவு எளிதில் இழக்க விரும்பாது  என்றும் கருத்துக்கள் பரவிவருகிறது.  ஆனால் தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களை முற்றிலுமாக மறுத்துள்ளார் அதிதி சிங்,  காந்தியின் பிறந்த தினத்தில் அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதற்காகவே தான் சட்டமன்றத்துக்கு சென்றதாகவும்,  அதில் வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

click me!