கையில் வாளுடன் ஸ்டாலினை நெருங்கிய ரெளடிகள்..! அதிர்ந்த அறிவாலயம்! இது கோயமுத்தூர் தி.மு.க. உள்கொடுமைங்கோ!

By Vishnu PriyaFirst Published Oct 3, 2019, 4:22 PM IST
Highlights

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்க துடிக்கும் தி.மு.க.வானது அ.தி.மு.க.வை எதிர்த்துப் போராடுவதை விட தங்கள் கட்சிக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்து முட்டிக் கொள்வதும், பொறுப்பின்றி திரிவதுமாக இருப்பதுதான் அவலமாக இருக்கிறது.  தன் வயதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், சிறு குழந்தை போல் ஸ்டாலின் ஓடியாடி உழைக்கையில் அவர் கட்சி நிர்வாகிகளோ வீண் சர்ச்சைகளுக்கு அடித்தளமிடுவதாக தி.மு.க.வின் உச்ச நிர்வாகிகளே புலம்பிக் கொட்டுகின்றனர்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்க துடிக்கும் தி.மு.க.வானது அ.தி.மு.க.வை எதிர்த்துப் போராடுவதை விட தங்கள் கட்சிக்குள் ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்து முட்டிக் கொள்வதும், பொறுப்பின்றி திரிவதுமாக இருப்பதுதான் அவலமாக இருக்கிறது.  தன் வயதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், சிறு குழந்தை போல் ஸ்டாலின் ஓடியாடி உழைக்கையில் அவர் கட்சி நிர்வாகிகளோ வீண் சர்ச்சைகளுக்கு அடித்தளமிடுவதாக தி.மு.க.வின் உச்ச நிர்வாகிகளே புலம்பிக் கொட்டுகின்றனர்.

 

இந்தப் பிரச்னைகான பெரிய உதாரணமாக சுட்டிக் காட்டப்படும் விவகாரம்தான் இது. அதாவது நாடளுமன்ற தேர்தலில் வெற்றி தந்ததற்காக சில தொகுதிகளில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். அந்த வகையில் கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது அவருக்கு வீரவாள் ஒன்றை பரிசளித்துள்ளனர் சில இளைஞர்கள். இப்போது இந்த இளைஞர்களின் பயோடேட்டாவை எடுத்து வைத்துதான் பஞ்சாயத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. டீம் ஒன்று. 

அதாவது ஸ்டாலினுக்கு வீரவாள் கொடுத்த அஸ்வின், கோகுல் எனும் இருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கிறதாம். அஸ்வின் மீது கொலை முயற்சி வழக்கும், கோகுல் மீது ‘டிரைவரை தாக்கிட்டு முப்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி மற்றும் தேங்காய்களை கடத்துன வழக்கு’ ஒன்றும் இருக்குதாம். இந்த வழக்கு ஆவணங்களை எடுத்து வைத்து அறிவாலயம் மற்றும் தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகளுக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கும் அந்த டீம் “இப்படி குற்றப் பின்னணி உடைய நபர்களை, கையில் ’அன்பளிப்பு’ எனும் பெயரில் ஆயுதத்தை வைத்துக் கொண்டு ஸ்டாலினை நெருங்கிட, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தென்றல் செல்வராஜ் அனுமதித்தது எப்படி? எல்லாமே அவரது மகன் மணிமாறனின் வேலைதான். 

கிரிமினல் ப்ரொஃபைலுடைய பசங்களோடு நட்பு வைத்துக் கொண்டு வலம் வரும் மணிமாறன், தன்னுடைய சுயலாபத்துக்காக இப்படியான வேலையை செய்திருக்கிறார். இதை தட்டிக் கேட்க திராணியில்லாத நபராக அவரது அப்பா செல்வராஜூம் இருக்கிறார். கட்சிக்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் இப்படி வீர  வாளை தருகிறேன், வீர கத்தி தருகிறேன் என்று தலைவரை நெருங்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? நாளைய தமிழகத்துக்கு முதல்வராக இருப்பவரை, தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவராக இருப்பவரை, பெரும் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் தலைவரை இப்படித்தான் அஜாக்கிரதையாக இப்படியான நபர்கள் நெருங்கிட அனுமதிப்பார்களா? 

தென்றல் செல்வராஜ் மீது தீவிர விசாரணை நடத்தி அவரது பதவியை பறிக்க வேண்டும், அவரது  மகனையும் கட்சியின் தலைமை எச்சரிக்க வேண்டும்!”  என பொங்கியுள்ளனர். ஆனால் அஸ்வினும், கோகுலும் தங்கள் மீதான வழக்கு பில்ட் - அப் வழக்கு என்றும், சாதாரண வழக்கை பெரிதாய் ஸீன் போட்டுள்ளார்கள்! என்றும் ”ஸ்டாலினுக்கு நாங்க வாள் கொடுக்கலை. அதை கொடுக்குறப்ப பக்கத்தில் நின்னோம். எங்களை ‘ரெளடி’ என்று சில தி.மு.க.வினர் விமர்சிப்பதை கண்டிக்கிறோம்.” என்கின்றனர். 

தென்றல் செல்வராஜோ ‘என் வளர்ச்சி பிடிக்காதவர்கள் கிளப்பும் வதந்தி இது!’ என்கிறார். 

ஸ்டாலின் இதையும் ‘ஆக!’ என்று எடுத்துக் கொண்டால், அது ஆகவேதான்.
-

click me!