மதுரை மேயருக்கு எதிராக அமைச்சரே உண்ணாவிரதம் என்று சொன்னால் மக்கள் சாகும் வரை உண்ணாவிரதம் தான் இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையொட்டி, மதுரை அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், மதுரையில் மேயரை எதிர்த்து அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பது திமுக ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளையே காட்டுகிறது. பருவ மழைக்காலங்களில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்த வெள்ளநீர் பாதிப்பு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரினோம். ஆனால் அதை செய்யவில்லை. அமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருப்பதாக நாங்கள் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் என் கையில் நிர்வாகம் இல்லை என தனது இயலாமையை ஒப்புதல் வாக்குமூலமாக அமைச்சர் அளித்திருப்பதாகத் தெரிகிறது. அமைச்சரின் இயலாமையா, அரசியலா, உட்கட்சி விவகாரமா எனத்தெரியவில்லை. மொத்தத்தில் நிர்வாகம் முடங்கி செயல் இழந்து உள்ளதாக கூறினார்.
திமுகவின் உட்கட்சி பிரச்சானையால் ஒட்டுமொத்த மதுரை மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்கள் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. அமைச்சரின் இயலாமை ஒப்புதல் வாக்குமூலத்தை தான் இது காட்டுகிறது என தெரிவித்தார். வாடிப்பட்டி அதிமுக சேர்மன் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக கூறினார்.
ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கும் நாள்..! இருள் விலகி ஒளி பிறக்கட்டும் - ஓபிஎஸ்
காவல்துறையை சுதந்திரமாக விட்டால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். 30 நாளில் 50 கொலைகள் நடக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் முதல்வர் பேச மறுக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், துரோகிகள் சந்திப்பதை சாட்சி வைத்துக் கொண்டா சந்திப்பார்கள் என கேள்வி எழுப்பினார். சந்தித்தவர்கள் மனச்சாட்சிக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் அதை சொல்லி உள்ளார். சாட்சி வைத்துக்கொண்டு சந்திக்க மாட்டார்கள் என எங்களுக்கு தெரியும். சாட்சி இல்லாமல் சந்தித்த ரகசிய சந்திப்பை தான் நாங்கள் அம்பலம்படுத்தி உள்ளோம். ஓபிஎஸ் மனசாட்சி தான் அவருக்கு ஆதாரம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்