கருணாநிதிக்கு மானாட மயிலாட இல்லையென்றால் தூக்கம் வராது..! ஸ்டாலினுக்கு மாநாடு இல்லைனா வராது- ஆர்.பி உதயகுமார்

By Ajmal KhanFirst Published Sep 19, 2022, 1:19 PM IST
Highlights

அதிமுகவின் திட்டங்களுக்கு மூடு விழா கண்ட திமுக அரசுக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளையொட்டி  மதுரை புறநகர் மேற்கு  மாவட்டம் சார்பாக சோழவந்தான் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இருசக்கர வாகனம், ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினி,  பிரசிவித்த தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம், அம்மா உணவகம்  உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும்  திமுக அரசு முடக்கி வருவதாக குற்றம்சாட்டினார்.  நாளைய தினமே தேர்தல் வந்தாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என கூறினார். நாவடக்கம் இல்லாமல ஆ.ராசா இந்துக்களை விமர்சித்து வருகிறார், இதற்கு ஸ்டாலின் ஒரு கண்டன அறிக்கையோ நடவடிக்கையோ எடுக்க வில்லை, ஒட்டு மொத்த இந்துக்கள் மீது அவதூறான வார்த்தை கூறி வரும் ராஜா மீது ஏன் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பினார். 

 கலைருக்கு மானாட மயிலாட

சொத்து வரியை கட்ட சொத்தை விற்க கூடிய நிலையில், வாடகை வீட்டில் இருப்பவர்களே விட்டு வரியை கட்டக்கூடிய நிலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்.  முல்லை பெரியார் அணை - எடப்பாடியார் அவர்களின் ஆட்சி காலத்தில் 3 முறை 142 அடி உயர்த்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 142 அடி உயர்த்த தயாராக இல்லை என தெரிவித்தார். பென்னி குக்கிற்கு அதிமுக காலகட்டத்தில் மணிமன்டபம் கட்டபட்ட நிலையில், பென்னிகுயிக் சிலையை லண்டனில் திறக்க முடியாமல் திமுகவினர் தமிழகம் திரும்பி உள்ளதாக விமர்சித்தார்.   விளம்பர அறிவிப்பாக வெற்று அறிவிப்பாக டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. போக்குவரத்து நிறைத்த மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எவ்வாறு அமையும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி எனவும் குறிப்பிட்டார்.   கலைஞருக்கு மானாட மயிலாட இல்லையென்றால் தூக்கம் வராது, மாநாடு இல்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது! அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு சங்கு ஊதிய ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் நிச்சயம் மக்கள் சங்கு ஊதுவார்கள் என உறுதிபட தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அதிகரிக்கும் தீண்டாமை கொடுமை...! திமுக அரசின் மெத்தன போக்கே காரணம்- ஓபிஎஸ் ஆவேசம்

click me!