கொரோனாவை விட கொடூரமாக பரவும் H1N1! ஸ்கூலுக்கு மீண்டும் விடுமுறை?அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சிகள்

By vinoth kumarFirst Published Sep 19, 2022, 11:30 AM IST
Highlights

H1N1 , இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறிகள் கடந்த வருடங்களாக உலகில் பரவி வரும் கொரோனாவை போன்றே இருப்பதால் பாதிப்பிற்குள்ளானவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்வது நல்லது. H1N1, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் எளிதில் எல்லோரிடமும் பரவுவதால், கொரோனா தடுப்பு கோட்பாடுளை கடைப்பிடித்தாலே பரவுவதை தவிற்கலாம்

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகம் முழுவதும் தற்பொழுது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது . இது H1N1 , இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்ற கண்டறியப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிகமாக பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த காய்ச்சலால் திடீர் வறட்டு இருமல் , தொண்டை வலி , மூக்கடைப்பு மற்றும் உடல் வலி , உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் இருக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க;- 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் அவசர கோரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?

H1N1 , இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறிகள் கடந்த வருடங்களாக உலகில் பரவி வரும் கொரோனாவை போன்றே இருப்பதால் பாதிப்பிற்குள்ளானவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்வது நல்லது. H1N1, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் எளிதில் எல்லோரிடமும் பரவுவதால், கொரோனா தடுப்பு கோட்பாடுளை கடைப்பிடித்தாலே பரவுவதை தவிற்கலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களாக மக்கள் வெளியிடங்களுக்கு வரும் பொழுது முக கவசங்களை அணியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. 

ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள காய்ச்சலில் இருந்து நாம் விடுபட கட்டாயம் முகவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு அரசு உடனடியாக வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உரிய விளம்பரங்கள் மூலம் மக்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் H1N1, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும்.

 அவர்களுக்கு கற்றல் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். 10 , 11 , 12 ஆகிய வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் அரசு தேர்வுகள் இருப்பதால் அவர்களுக்கு உரிய வழிக்காட்டுதலின் படியும் , பாதுகாப்புடன் வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும் . காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை செய்து அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என  ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஏற்கனவே ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள்  1 முதல் 9 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  திமுக துணைபொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறார் முக்கிய பிரமுகர்? அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.!

click me!