18 மாதத்தில் எத்தனை பேருக்கு வேலை வழக்குனீங்க! வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?ஸ்டாலினை சீண்டும் ஆர்பி.உதயகுமார்

Published : Dec 26, 2022, 11:43 AM IST
18 மாதத்தில் எத்தனை பேருக்கு வேலை வழக்குனீங்க! வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?ஸ்டாலினை சீண்டும் ஆர்பி.உதயகுமார்

சுருக்கம்

திமுக  அரசு அமைந்து 18 மாத காலத்திலே, அரசு வேலைவாய்ப்புகளை எத்தனை பேர்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அரசு தயாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு துறையில் 5.50 லட்சம் பேருக்கு வேலை

அரசு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தேர்தல் அறிக்கை  எண்188யில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும்,பொது சொத்துக்களை பாதுகாக்கவும் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்க படுவார்கள் என்றும் , இது போன்ற அறிவிப்புகள் மூலம் 5.50 லட்சம் அரசு துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது தேர்தல் அறிக்கை கூறப்பட்டு, ஆட்சிக்கு வந்த திமுக முன்னேற்றக் கழக அரசு இந்த 18 மாத காலத்திலே எத்தனை பேர்களுக்கு வேலைகள் வழங்கி இருக்கிறது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு அரசு தயாரா?

அரசின் அறிவிப்பால் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஏமாற்றம்.! ஸ்டாலினுக்கு அவரச கடிதம் எழுதிய கே.பாலகிருஷ்ணன்

ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு

 73,99512 நபர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிற இளைய சமுதாயத்தில் வாழ்வில் ஒளியேற்றிய நடவடிக்கையின் அரசு நடவடிக்கை  எடுத்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளிலே ஓய்வு பெறுபவர்களின் காலி பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகளின் அனைத்தும் பட்டியல்களை கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறார். இந்த  நடைமுறையில் உள்ள பணியிடங்களுக்கு அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி தேர்வு செய்து பணி வழங்குகிறது தொழில்நுட்பங்கள் வளர வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றுங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எண்ணூர் கடலில் குளித்த வடமாநில இளைஞர்கள்..! ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயம் - மீட்பு பணி தீவிரம்


டிஎன்பிஎஸ்சி அட்டவணை ஏமாற்றம்

இன்றைக்கு இளைய சமுதாயத்தின் உடைய வேலைவாய்ப்பு தேடல் என்பது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியோடு பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்து சில மாதங்களுக்கு முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21, 85 ,328 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்,  அப்படி எதிர்பார்த்து காத்திருக்கிற பலருக்கு டி.என்.பி.எஸ்.சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட  போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய குரூப் 2, குரூப் 3பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாததும் குரூப் 4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா.?

குரூப் ஒன் தேர்வில் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நவம்பர் முதல் நிலை 2024 ஜூலை முதன்மை டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை காலி இடங்கள் என்ற விவரங்கள் இல்லாத ஏமாற்றம் அளிக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில்  ஐந்தரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் என்று சொன்னது கானல் நீராகத்தான் உள்ளது, அது பகல் கனவாக இளைய  சமுதாயத்திற்கு இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா? என்பதை எடப்பாடியார் வழிகாட்டுதலோடு கேட்டுக்கொள்வதாக ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

விபத்தில் சிக்கிய கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார்..! சுற்றுலா வாகனம் மோதியதால் பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்