காலையில் காபி அருந்துவது தான் வழக்கம்.! திராவிட மாடல் அரசில் எழுந்ததும் மது குடிக்கனுமா.? ஆர்.பி.உதயகுமார்

By Ajmal Khan  |  First Published Jul 12, 2023, 11:56 AM IST

உலகத் தமிழினமே வெட்கிதலை குனியும் வகையில் அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தை குடிகார நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார். 


காலையில் மதுபான கடை திறப்பு

90 மில்லி மது விற்பனை, காலையில் மது பான கடை திறப்பு தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வரும் நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், காலையில் கண்விழித்தால் ஏழ மணிக்கே மது அருந்தலாம் என்ற நிலையை உருவாக்கி வருவது இன்றைக்கு விவாதமாக உள்ளது. காலையில் எழுந்தால் பத்திரிகை படிப்பதும், காபி அருந்துவது தான் நடைமுறையில் உள்ளது.

Latest Videos

undefined

ஆனால் ஆனால் திராவிட மாடல் அரசு காலையில் எழுந்தவுடன் மது அருந்தும் நிலையை  வந்துவிடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் முத்துசாமி அமைப்புசாரா தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் மீது பழியைப் போட்டு குடிப்பழக்கம் உள்ளவர்கள் போல தோற்றம் ஏற்பட்டது போல ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை விட்டுள்ளார் 

அதிகரித்த காய்கறி விலை

நீதிமன்றமோ மது அருந்துவது சமூகத் தீங்கு இதை அறவே ஒழிக்க வேண்டும் மது அருந்துவது இளைஞர்கள் வேதனையில் உள்ளனர் . இளைஞர்கள் வாழ்வில் கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறியுள்ளது. மதுவால் தீங்கு குறித்து எந்த விழிப்புணர்வும் செய்யவில்லை ஆனால் டாஸ்மார்க் நேரத்தை கூட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர் அதுமட்டுமல்லாது இன்றைக்கு தக்காளி, மிளகாய், இஞ்சி உள்ளிட்ட காய்கள் விலை ஏறிவிட்டது இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கையில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்nr. கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வை அம்மா அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.

தமிழகம் குடிகார நாடாக மாறிவிடுமோ

 கொரோனா கால கட்டங்களில் கூட எடப்பாடியார் விலைவாசி உயரவை ஏற்றாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் தற்போது சாதாரண நிலையில் கூட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை மது நேரத்தை அதிகரிக்க தொழிலாளர் மீது பணிவு சுமத்துவது வேதனையாக உள்ளது. இது நீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும் தமிழர்களின் பண்பாட்டை, பாரம்பரியத்தை உலகத் தமிழர்கள் எடுத்துரைத்து வருகிறனர் ஆனால் உலகத் தமிழர்களே மனம் வேதனை படும் வகையில் தமிழகம் குடிகார நாடாக மாறிவிடுமோ என்று வேலை அடைந்து வருகின்றனர் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதையும் படியுங்கள்

தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம் - எச்.ராஜா பகீர் தகவல்

click me!