வெள்ளக்காடாய் சென்னை..! 90% பணிகள் முடிந்ததாக கூறும் திமுக..! 40% பணிகள் கூட முடிவடையவில்லை- ஆர்.பி. உதயகுமார்

By Ajmal KhanFirst Published Nov 2, 2022, 12:51 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழையில் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 90 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக ரெடிமேட் பதிலை அரசு கூறுகிறது ஆனால் 40 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லையென கூறியுள்ளார். 
 

75% நீர் நிலைகள் நிரம்பியது

தமிழகத்தில் மழை பாதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்தாண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நமக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழைத்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களின் 75 சதவீதம் முதல் 100 சகவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மழை நீரால் நீர்நிலை நிறைந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

சென்னையில் கன மழை..! நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரி..! திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்கள்

மழையால் சென்னை பாதிப்பு

சென்னை கேகே நகர், அசோக் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த மழையால் சென்னை வியாசர்பாடி சேர்ந்த தேவேந்திரன்  மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக பலியாகி உள்ளார். புளியந்தோப்பில் ஒரு பெண் மழையினால் சுவர் இடிந்து விழுந்து கதறி அழும்காட்சியில் ஒரு  கண்ணீரை வர வழைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறதா ? ஒரு மழைக்கே தமிழகம் தத்தளிக்கிறது என்கிற நிலையை நாம் பார்க்கிறோம் சென்னை வடிநீர் கால்வாய்  திட்டம் அரை குறையாக செய்துள்ளார்கள். ஒரு மழைக்கே அது சாட்சி சொல்லி வருகிறது. முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன என்று கூறுகிறார் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணி முடிந்து இருக்கிறது என்ற கள நிலவரம் சரியாக தெரியவில்லை. அதிகாரிகள் 90% பணிகள் முடிந்து விட்டதாக ரெடிமேடு பதில்களை கூறுகிறார்களே தவிர உண்மையான களநிலவரத்தை  அதிகாரிகள் சொல்வதே இல்லை. சென்னையில் வடிகால் பணிகள் 40 சதவீத பணிகள் கூட முடியவில்லை என்பது தான் இன்றைய உண்மையான நிலை.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை.. சென்னையில் விடாமல் தொடரும் மழை..

முடிவடையாத கால்வாய் பணி

இன்று ஒரு சிறிய மழைக்கு சென்னை தத்தளிக்கிறது. அங்குமிங்கும் அமைச்சர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.   ஆனால் எந்த வேலையும் நடைபெறுவதாக தெரியவில்லை. இந்த பிரதான கால்வாய் தொடர் கண்காணிப்பு, இணைப்பு மற்றும் கண்காணிக்க வேண்டிய கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் இவைகள் எல்லாம் முழுமையாக கண்காணிக்கப்படவில்லை என்பதுதான் ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது. தற்போது சிங்கார சென்னை  திட்டத்தில்  கட்டமைப்பு நிதி, வெள்ளத் தடுப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியின்  புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் வடிகால் தூர் வாறும் பணிகள் நடைபெறுவதாக  அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு 1058 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்வதாக அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அவசர கதியில் பணி

இந்த பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு பணிகள் செய்திருந்தால், சென்னை அல்லல் பட வேண்டிய அவசியம் இருக்காது என்பது தான் பெரும்பான்மையான மக்களினுடைய கருத்து..அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கக்கூடிய மழை நீர் தான் நமக்கு முக்கியம். மழை மழை கொஞ்ச நேரம் பெய்தால் கூட ,சென்னையில் மழை நீர் சாலையை மூழ்கடித்து செல்கிறது மக்கள் அவதிப்படக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம். சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு சாலையில் ஒரு மண்ணை கொட்டி அந்த பணி செய்துள்ளார்கள். திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிட்டியின் உடைய பரிந்துரை முடிவுகள் என்ன என்பதை இதுவரை அரசு வெளியிடவில்லை.

உயிர் இழப்பு இல்லாத நிலை

பல்வேறு குழப்பங்களில் பெரும்பாலான இடங்களில் பணிகள் செய்யாத  காரணத்தினால் சென்னையில் பாதுகாப்பற்ற நிலையை தான் நம் காண முடித்தது. பிரதான கால்வாய் எந்த கால்வாயோடு இணைக்கிறது என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.கடந்த ஆண்டு சென்னையில் பெய்த பருவமலையின் காரணமாக சென்னை மக்கள் பாதிக்கப்பட்டது. அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான். பருவமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்த அரசு தவறி விட்டது என்பது தான் நேற்று சென்னையில் ஊடக காட்சிகளிலே தெரிகிறது. ஆகவே இந்த பேரிடர் காலங்களில் எடப்பாடியார் மேற்கொண்ட பணிகளைப் பின்பற்றி, உயிர்இழப்புகள் இல்லாத வடகிழக்கு பருவமழையை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

விடியலை நோக்கி ஆட்சி எனக் கூறிய திமுக..! ஒரு குடும்பத்திற்கு மட்டுமே விடியல் செல்கிறது - ஓபிஎஸ் ஆவேசம்

click me!