இட்லி தொழிற்சாலை ஒன்று தான் மதுரையில் உள்ளது... வேறு எந்த தொழிற்சாலையும் பார்க்க முடியவில்லை- ஆர்.பி உதயகுமார்

By Ajmal KhanFirst Published Nov 29, 2023, 11:42 AM IST
Highlights

தென் மாவட்டங்களில் தொழில் புரட்சிக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை மதுரையில் அறிவித்த டைட்டில் பார்க் கிணத்தில் போட்ட கல்லாக உள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இட்லி தொழில் தொழிற்சாலையில் தான் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார். 
 

தமிழகத்தில் தொழில் முதலீடு

தென் மாவட்டங்களில் தொழிற்சாலை தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில்,  முதலமைச்சர்  ஸ்டாலின்  சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெறுகிறது என்றும் அதில், உலகம் முழுவதும் இருந்து தொழில் மூதலீட்டார்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றன என்று பெருமை பேசியுள்ளார்.அதில் கூட  பின்தங்கிய மாவட்டங்களில்  முன்னுரிமை தருவதாக சொல்லி இருக்கிறார்.  அம்மா முதன்முதலாக உலக முதலீட்டார்கள் மாநாட்டை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து அவரின் வழியில் எடப்பாடியார் 2019 ஆம் ஆண்டு மூன்று லட்சம் கோடியில் முதலீட்டை ஈர்த்து, இதன்மூலம், 10.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்.

Latest Videos

மதுரையில் டைட்டில் பூங்கா

தமிழ்நாட்டிலே தொழில் தொடங்க முன் வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களை வரவேற்க யாரும் ஊரே என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பத்துறையின் தாய் வீடான சிலிக்கானுக்கு சென்று  ஆய்வுகளை மேற்கொண்டார்.  ஆனால்  திமுக அரசு தென் தமிழகத்தில் இன்றைக்கு தொழில் புரட்சிக்கு நீங்கள் என்ன முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்? மதுரையில் டைட்டில் பூங்கா அறிவித்து இன்றைக்கு கிணற்றில் போட்ட கல்லாக தூங்கிக் கொண்டிருக்கிறது. அது போல, மதுரைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் என அறிவித்து இன்னமும் நிதி கிடைக்கவில்லை.  அம்மாவுடைய காலத்திலே மதுரையிலிருந்து, தூத்துக்குடி வரை எக்கனாமிக் காலிடார் என்கிற தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

தொழிற்சாலைகள் மூடல்

அதனையொட்டி எடப்பாடியார்  அதற்கான பல முன் முயற்சிகளை எடுத்து,  இடம் மானியமாக தருவது,மின்சாரத்தை மானியமாக தருவது, வரிவிலக்கு அளிப்பது என பல முயற்சிகள் எடுத்தார். தற்போது அது எந்த நிலைமையில் இருக்கிறது என்று சட்டசபையில் கூட கேள்வி முன் வைத்த போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முயற்சியில் நடந்து கொண்டிருக்கிறது என்று பதில் சொன்னார். தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்றவற்றில் தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளன. இப்போது மதுரையில் இட்லி தொழிற்சாலை ஒன்று தான் நடைபெறுகிறது வேறு எந்த தொழிற்சாலை நாம் பார்க்க முடியவில்லை.

மதுரையை புறக்கணிப்பது ஏன்.?

நீங்கள் அறிவித்த அந்த டைட்டில் பார்க் என்பது இன்றைக்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்று தெரியவில்லை. மதுரையை மட்டும் நீங்கள் புறக்கணிப்பது ஏன்? அறிவிப்புகள் கானல் நீராக இருக்கிறதே,அதை காட்சிப்படுத்துவதற்கு நீங்கள் முயற்சி எடுப்பீர்களா? ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர் அவர்களின் வறுமை ஒழித்து  வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் முன்வருவாரா? இல்லை வெறும் வாய்ஜாலத்தில் பேசிக்கொண்டே இருப்பாரா? அல்லது செயல் வடிவம் கொடுப்பாரா? அலங்கார வார்த்தைகளால் இன்றைக்கு இளைஞர்களுடைய வாழ்விலே ஒளி ஏற்ற முடியாது.  முதலீட்டார்கள் மாநாட்டில் அம்மா, எடப்பாடியார் அமைத்துக் கொடுத்த அந்த வழித்தடத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து அதை செயல் வடிவம் ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்க முன் வருவீர்களா?  

போராடும் மனநிலையில் மக்கள்

போராடுகிறவர்கள் மீது குண்டாஸ் வழக்கு, ஒரு கோடி பேர்கள் ஈடுபட்டிருக்கிற சிறு குறு தொழில் நிறுவனங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று போராடுவர்கள் மீது நீங்கள் வழக்கு போடுகிறீர்கள்? தமிழ்நாட்டில் இருக்கிற எட்டு கோடி தமிழர்களும் உங்களுக்கு எதிராக போராடுகிற மனநிலையில் இருக்கிறார்களே? எட்டு கோடி தமிழர்கள் மீது வழக்கு போட்டு நீங்கள் சிறையில் அடைத்து விடுவீர்களா? என ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

சென்னை நகைப்பட்டறையில் 6 கிலோ தங்க திரவம் கொள்ளை.! குற்றவாளி யார்- அதிரடியாக களத்தில் இறங்கிய போலீஸ்

click me!