அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றனர். தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அக்கட்சியின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் கழற்றிவிடப்பட்ட தமிழக பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் கூட்டணி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமமுக, ஓபிஎஸ், பாமக மற்றும் புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் ரகசிய நடைபெற்று வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுகவை முந்திக்கொண்டு தேர்தல் பணிகளை கவனிக்க தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை தமிழக பாஜக கட்சி தலைவர் நியமித்துள்ளார்.
* சேலம் மக்களவைத் தொகுதி- கே.பி.ராமலிங்கம்
* ஈரோடு மக்களவைத் தொகுதி - வானதி சீனிவாசன்
* பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி- முருகானந்தம்
* சிதம்பரம் மக்களவைத் தொகுதி- எஸ்.ஜி.சூர்யா
* தென்காசி மக்களவைத் தொகுதி- பொன்.ராதாகிருஷ்ணன்
* நாமக்கல் மக்களவைத் தொகுதி - வி.பி.துரைசாமி
* அரக்கோணம் மக்களவைத் தொகுதி - சக்கரவர்த்தி
* காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி - கே.டி.ராகவன்
* வேலூர் மக்களவைத் தொகுதி - கார்த்தியாயினி
* கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி - அஸ்வத்தாமன்
* கோவை மக்களவைத் தொகுதி- செல்வக்குமார்
* தூத்துக்குடி மக்களவைத் தொகுதி- சசிகலா புஷ்பா
* நெல்லை மக்களவைத் தொகுதி- நயினார் நாகேந்திரன்
நியமனம் செய்யப்பட்ட 39 பொறுப்பாளர்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல.. பதிவை நீக்கிய கோழை.. அண்ணாமலை, மனோ தங்கராஜ் மோதல்