பசுந்தோல் போத்திய புலியாக வெளிவந்த திமுக அரசின் அரசாணை..! தடுத்து நிறுத்திய இபிஎஸ்- ஆர்.பி.உதயகுமார்

By Ajmal KhanFirst Published Nov 10, 2022, 11:05 AM IST
Highlights

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தநிலையில் அரசாணை திரும்ப பெற்றதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தனியார் மூலம் அரசு பணிக்கு ஆட்கள் தேர்வு

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து  ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்க்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இதனையடுத்து குழுவிற்கு விதிக்கப்பட்ட வரைமுறை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தினந்தோறும் ஆளுகிற அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தொடர்ந்து நினைவு படுத்தி வலியுறுத்தி வந்தாலும் கூட,

தேர்தல் வாக்குறுதிகள் இன்றைக்கு கிணத்திலே போட்ட கல்லாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்கள். குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள மூன்றரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதி எண் 187 யில்கூறப்பட்டன.

தேனி எம்பி ரவீந்திரநாத் தலைமையில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்..! புறக்கணித்த திமுக எம்எல்ஏக்கள்..

சமூக நீதிக்கு பேராபத்து

மேலும்   புதிதாக ஏறத்தாழ 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மொத்தம் ஐந்தரை லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். இன்னைக்கு வாக்குறுதிகள் கிணற்றிலே போட்ட கல்லாக உள்ளது. இன்றைக்கு சமூக நீதிக்கு ஒரு பேராபத்து வரக்கூடிய ஒரு நிலையில் தமிழகத்திலே இன்றைக்கு 69% இட ஒதுக்கீடுக்கு பேராபத்து வரக்கூடிய அரசாணை எண் 115 யை முதல் முதலாக சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தமிழ்நாட்டிலே முதல் உரிமைக்குரலாக அரசாங்க எண் 115 ரத்து செய்ய வேண்டும், பாடுபட்டு கல்வி பயின்று கனவு நினைவாகிற வகையில் வாழ்நாளெல்லாம் தன் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வியறிவு பெற்று எப்படியாவது தன் குடும்பத்தில் ஒரு அரசு பணியை பெற்றுவிட வேண்டும் என்று இளைஞர்களுடைய கனவை தெரிவித்து கடுமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இதனுடைய பேராபத்தை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதோடு இந்த அரசினுடைய நடவடிக்கைக்கு சுட்டிக்காட்டினார். 

இளைஞர்கள் பாதிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையும், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு இந்த தேர்வாணையங்கள் மூலமாக தான் நாம் இளைஞர்களை தேர்வு செய்து ஆட்களை தேர்வு செய்து நாம் அரசு பணியிலே நியமிக்கின்றோம். ஆனால் இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையை தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு முடிவு செய்திருப்பது இந்த அரசாணை எண் 115யின் சாராம்சமாகும். அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், அந்த நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையிலே மாற்றங்களை மேம்படுத்துவோம் என்று சொல்வது அது மேல்போக்கான வார்த்தைகளாக இருக்கிறது இந்த 115 அரசாணை பசுதோல் போர்த்திய புலியாகும். பார்ப்பதற்கு பசுவாகவும் ஆனால புலியாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பை தான் நாம் பார்க்கிறோம். 

2024ல் 39 சீட் குறிச்சு வச்சுக்கோங்க ! எதிர்கட்சிகளை அலறவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !


 இபிஎஸ் முயற்சியால் வெற்றி

ஆறு மாத காலத்திலே இந்த சீர்திருத்த குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து  நடைமுறைப்படுத்தபட்டால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் இருளிலே மூழ்கும் இளைய சமுதாயத்தின் அரசு பணி என்கிற கனவு காணாமல் போகும், இனி அரசு பணியாளர் என்கிற ஒரு நிலையை தமிழ்நாட்டில் இல்லை என்கிற ஒரு நிலை உருவாகிற ஒரு பேர்ஆபத்து இளைய சமுதாயத்தை சூழ்ந்து இருக்கிறது இளைய சமுதாயத்தை விழித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் இளைஞர்கள் எதிர்காலத்திற்காக, நன்மைக்காக,  பாதுகாப்புக்காக உரிமை குரல் கொடுத்தார்.

இந்த ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்படும் அரசு அறிவித்திருப்பது  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் எடுத்துட்ட அந்த முயற்சி கிடைத்த வெற்றி. இன்றைக்கு இளைய சமுதாயம் எடப்பாடியாருக்கு சமுதாயத்தின் சார்பிலே கோடான கோடி நன்றியை தெரிவித்து வருகின்றனர். பசுந்தோல் போத்திய புலியாக வெளிவந்த அரசாணை 115யை தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார் என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக நிலங்களை ஆக்கிரமிக்கும் கேரள அரசு..! கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசும் திமுக- இறங்கி அடிக்கும் பாஜக

click me!