மினிஸ்டர் ஜெயக்குமர் மேல செம்ம காண்டுலகீறோம்பா: இது ராயபுரம் ரவுசு!

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 04:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
மினிஸ்டர் ஜெயக்குமர் மேல செம்ம காண்டுலகீறோம்பா: இது ராயபுரம் ரவுசு!

சுருக்கம்

Rayapuram people anger against Minister Jayakumar

எடப்பாடி மற்றும் பன்னீரின் அணியால் சசிகலா தரப்பு விளக்கி வைக்கப்பட்ட பின், சசி மற்றும் தினகரன் இருவரையும் மிக அதிகமாக விமர்சித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர்களில் முக்கியமானவர் அமைச்சர் ஜெயக்குமார். 

இதை தினகரனின் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கடுமையாய் எதிர்க்கும் நிலையில், எடப்பாடி அணியிலேயே ஜெயக்குமாருக்கு எதிர்ப்பாளர்கள் எக்கச்சக்கமாய் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் ஜெயக்குமாரை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளுகின்றனர் வெளிப்படையாய்.

ராயபுரத்தை சேர்ந்தவரும், அக்கட்சியின் மாவட்ட இலக்கிய அணிச்செயலாளருமான செல்வராஜ் “ஜெயக்குமாரு இந்த தொகுதிக்கு இன்னா செஞ்சிருக்காரு? தோ, பக்கத்துல இருக்குற ஆர்.கே.நகர் தொகுதியில காலேஜூ, ஆஸ்பிட்டலுன்னு அடி தூள் பண்றாங்கோ. ஆனா இங்கே எதுனா உண்டா! மீனவருங்க பாவம் மெர்சலாகி கெடக்குறாங்க. 
21 வருஷமா எம்.எல்.ஏ.ன்னு பேருதானே தவுர அவரால ஒரு ரோட்ட கூட இங்க போட முடியல. டெங்கு கொசு இன்னா ஆட்டம் காட்டுது, ஆனா மருந்தடிக்கு ஒத்த ஆள காணோம்யா! அவரு மேலே மீனவருங்க கம்யூனிட்டி செம்ம காண்டுலகீதுபா!” என்று கொளுத்திப் போட்டுள்ளார்  செம்ம நக்கலும், விக்கலுமாக. 

முன்னாடியெல்லாம் பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமாரின் வீட்டுக்கு யார் சென்றாலும் 50 ரூபாய்க்கு டோக்கன் தருவார்களாம். இதைக் கொண்டு போய் சங்கீதா ஹோட்டலில் கொடுத்து சாப்பிடலாமாம். ஆனா இப்போ அதையும் நிறுத்திவிட்டார் ஜெயக்குமார் என்று பேஜாராகி புலம்புகிறார்கள் தொகுதி அ.தி.மு.க தொண்டர்கள். 

மீன் வளத்துறை மந்திரி இப்படி மீனவர்களை சோகக்கடலில் ஆழ்த்தலாமா?
 

PREV
click me!

Recommended Stories

திரிஷாவுடன் திருமணம்..? மகாராணியை மாற்றும் விஜய்? வாயடைக்க வைக்கும் ரூ.250 கோடி செட்டில்மெண்ட்!
30 வருஷ உழைப்பா..? நேத்து வந்த பயலா..? நடுவானில் விஜய்யிடம் கதறிய புஸ்ஸி ஆனந்த்..!