ரெய்டுல ஒன்றுமே சிக்காதுன்னாரு... சசிகலா குடும்பத்தின் ரூ.1000 கோடி சொத்துகள் முடக்கம்?

First Published Nov 11, 2017, 4:17 PM IST
Highlights
sasikala families rs 1000 crore assets ceased by it department


போலி நிறுவனப் பதிவுகள் தொடர்பாக, சசிகலா குடும்பத்தினரை மையப் படுத்தி தமிழகம், பெங்களூர் உள்ளிட்ட  187 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசிகலாவின் உறவினர்கள், அவர்களது நண்பர்களின் வீடு, அலுவலகம் என தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 1000 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

இது குறித்து, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு, வருமான வரித்துறை அனுப்பியுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

வியாழக்கிழமை காலை தொடங்கி 3வது நாளாக இன்று வரை நடைபெற்று வருகிறது சோதனை.  

இந்த சோதனையில் போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், 15 கிலோ தங்கம் மற்றும் கணக்கில் வராத ரூ.5.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெயரளவிலான சில போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மூலம் ரூ.150 கோடி மதிப்பு ரூ.40 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

150 வங்கிக் கணக்குகள், 1000 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
ஜெயா டிவி நிர்வாகி விவேக் மற்றும் கலியபெருமாள் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில்தான் அதிகப்படியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.... 
- என்று அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!