ஓபிஎஸ் மகன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை தொடர்ந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பி. என்ற அந்தஸ்தை இழப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஃகு கோட்டை என்று கூறி வந்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தள்ளது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, அந்த பொதுதுக்கூட்டத்திலேயே சிறப்பு தீர்மானம் கொண்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டவர்களும் நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க;- ஐ. நா. சபைக்கே போங்க.. அப்பவும் நாங்கதான் ஜெயிப்போம்.. ஓபிஎஸ் தரப்பை ஜெர்க் ஆக்கும் ஜெயக்குமார்.!
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இதனையடுத்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. அதே பாணியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர் என்ற அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- கைக்கு வந்த கட்சி அலுவலகம்.. கேப் விடாமல் அடித்து நொறுக்கும் இபிஎஸ்.. தொடரும் ஓபிஎஸின் சறுக்கல்.!
ஓபிஎஸ் மகன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார்.