
சிறைகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பின்பற்றப்படவில்லை என்றும், இது தொடர்பாக நான் இன்று எழுப்பிய வினாவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு அளித்த பதிலில் வெளிப்படும் உண்மை என்று விடுதலை சிறைத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு :-
உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பிணை உத்தரவுகள் உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகளை சிறை அதிகாரிகளுக்கு வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் எவை?; (ஆ) கைதிகளின் விடுதலையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறதா, அப்படியானால், அதன் மாநிலவாரியாக அதன் விவரங்களைத் தருக ; இல்லை என்றால், அதற்கான காரணங்களைக் கூறுக; (இ) இணைய வசதி மற்றும் சிசிடிவி கேமரா கொண்ட மத்திய மற்றும் மாவட்ட சிறைகளின் விவரங்கள், மாநிலம்/யூடி வாரியாக வழங்குகஎன்ற கேள்விகளை எழுப்பினேன்: அதற்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பின்வருமாறு பதில் அளித்துள்ளார்:
(அ): Suo Moto ரிட் மனு எண்.4/2021 இல் 16.07.2021 மற்றும் 23.09.2021 தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஃபாஸ்டர் (ஃபாஸ்ட் அண்ட் செக்யூர்டு டிரான்ஸ்மிஷன் ஆஃப் எலக்ட்ரானிக் ரெக்கார்ட்ஸ்) அமைப்பு பரிமாற்றத்தை செயல்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டது. இடைக்கால உத்தரவுகளின் மின்-அங்கீகரிக்கப்பட்ட நகல்கள், தடை உத்தரவுகள், ஜாமீன் உத்தரவுகள் மற்றும் ப்ரொசீடிங் ரெக்கார்டுகள் , இணங்குதல் மற்றும் முறையாக நிறைவேற்றப்படுவதற்காக, பாதுகாப்பான மின்னணு தகவல் தொடர்பு சேனல் மூலம். உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு, ஜாமீன் உத்தரவு உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகளை டிஜிட்டல் மயமாக்க, இ-சிறைச்சாலை மென்பொருள் மற்றும் வழக்குத் தகவல் மென்பொருளை விண்ணப்பத் திட்ட இடைமுகம் (ஏபிஐ) மூலம் ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.(ஆ) : சிறைகளின் நிர்வாகம் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது, எனவே சிறை அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள் இங்கே பராமரிக்கப்படுவதில்லை.
(c) : தேசிய குற்ற ஆவண மையம் (NCRB) வழங்கிய தகவலின்படி, சிறைகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்களின் மாநில/யூனியன் பிரதேச வாரியான நிலை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் என்சிஆர்பி மத்திய மற்றும் மாவட்ட சிறைகளில் இணைய வசதி உள்ளதா என்பது குறித்த தனித் தரவுகளை பராமரிப்பதில்லை.என்று அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒன்றிய சட்ட அமைச்சர் அளித்துள்ள பதில்மூலம் 2019 வரை தமிழ்நாட்டுச் சிறைகளில் 67 சிசிடிவி காமிராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கின்றன எனத் தெரிகிறது. ஆனால் கர்நாடகாவில் 928 ; கேரளாவில் 826; தெலுங்கானாவில் 1061 , மகராஷ்டிராவில் 1580 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்படவேண்டும் என திலிப் கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநிலம் &பிறர் என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர் ஆர். பானுமதி அமர்வு 24.07.2015 அன்று தீர்ப்பளித்தது. “ சிசிடிவி கேமராக்கள், சிறையில் அடைக்கப்படுவோரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க பெருமளவில் உதவும். கைதிகள் மத்தியில் முறையான ஒழுக்கத்தைப் பேணுவதற்கும், துஷ்பிரயோகங்கள் கண்டறியப்படும் இடங்களிலெல்லாம் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இது அதிகாரிகளுக்கு உதவும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் இது விரைவாக நிறைவேற்றப்படவேண்டும்.” எனவும் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால் 6 ஆண்டுகள் கழிந்த பின்பும்கூட அந்த ஆணை செயல்படுத்தப்படவில்லை என்பதையே அமைச்சர் அளித்துள்ள பதில் காட்டுகிறது. தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உட்பட 135 சிறைகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.