தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முற்றுகை - திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

Asianet News Tamil  
Published : Mar 13, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முற்றுகை - திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

சுருக்கம்

ration shops surrounded by dmk cadres all over tamilnadu

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற பொருட்கள் 

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதில்லை. இதுபற்றி கடை ஊழியர்களிடம் கேட்டால், இருப்பு இல்லை. குடோனில் இருந்து வரவில்லை என்ற பதில் மட்டும் வருகிறது. இதனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அடிக்கடி தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

இதையொட்டி கடந்த வாரம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து திமுக எம்ல்ஏக்களும், தங்களது தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தரவேண்டும் என கேட்டு கொண்டார்.

அதன்படி அறிக்கை கொடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அனைத்து பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு திமுகவினர் திரண்டனர். ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கோஷமிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..