
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரது ரசிகர்களால் கடந்த 1996 ஆம் ஆண்டில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகி விட்டது என்றும் தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தார் சிரிப்பதாகவும் கூறினார். தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி கூறியிருந்தார். ரஜினியின் அரசியல் பிவேசம் குறித்து, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், திரைப்பட துறையினரும், அரசியல் கட்சி
தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் விசு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டரில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். இயக்குநர் விசு, முதன் முதலில் அதிமுகவில் இருந்தார். இதன் பின்னர், அவர் பாஜாகவில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலின் அரசியல் வருகை குறித்து, கடுமையான கருத்துக்களை இயக்குநர் விசு பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இது குறித்து விசு, தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து பதிவிட்டுள்ளார். உன் இறகால் நொந்துபோன தமிழ்நாட்டு மக்களின் இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய் என்று கவிதை வடிவில் வெளியிட்டுள்ளார்.
கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால்?
காட்டுல மயில் அழகா தோகையை விரிச்சு சூப்பரா dance ஆடுமாம்...!
உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம்
பொறாமை புடுங்ககித் தின்னுமாம்...!
அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு
கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு dance ஆடுமாம்..!
ரஜினி நீ மயில்... மற்ற உதிரி கோஷ்டிகள் வான் கோழி...!
நீ ஆடு ராஜா ஆடு...!
உன் இறகால் நொந்துபோன தமிழ் நாட்டு மக்களின்
இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய்...!
நன்றி ரஜினி நன்றி...! - இயக்குநர் விசு
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவாக, இயக்குநர் விசு, பேஸ்புக்கில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.