
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, சசிகலா அக்கா மகன், தினகரன், 'அம்மா தி.மு.க.,' என்ற கட்சியை துவங்க முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க.,வை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட்ட, தினகரன் பிரமாண்ட வெற்றி பெற்றார். அ.தி.மு.கவில் இருக்கு ஸ்லீப்பர் செல்ஸ் தான் இதற்கு காரணம் என காரணம் என கூறப்படுகிறது. தினகரனும் அங்கு ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள் விரைவில் வெளியில் வருவார்கள் என கூறிவந்தார். தினகரனின் இந்த ஸ்லீப்பர் செல்ஸ் பேச்சால் 200 பேரை அதிரடியாக நிக்கினார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினி, நேற்று முன்தினம், தனிக்கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால், முக்கிய கட்சிகளிலிருந்து பெரும் புள்ளிகள் ரஜினியின் கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அம்மா தி.மு.க.
ரஜினியின் கட்சியின் தனது ஆதரவாளர்கள் ஒருவர்கூட போய்விடக் கூடாது என்ற கவலையும் , பயமும் தினகரனுக்கு உருவாகி உள்ளது. எனவே, தனிக்கட்சி துவங்கும் முடிவை, தினகரன் எடுத்துள்ளார்.
கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும், தினகரனுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.எனவே, அனைத்திந்திய அ.தி.மு.க.,வை போல, 'அனைத்திந்திய அம்மா தி.மு.க.,' என்ற பெயரில் புதியகட்சி தொடங்க ஆலோசனை நடத்தி வருகிறாராம். கட்சி கொடியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவத்தை பொறிப்பது, தேர்தல்களில், 'குக்கர்' சின்னத்தையே பயன்படுத்துவது என்றும் தீர்மானித்து உள்ளாராம்.
'அ.தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் தான், தன் செல்வாக்கு உயரும். அ.தி.மு.க.,வில் சேர்ந்தால், ஆட்சி, அதிகாரத்திற்காக ஆசைப்பட்டதாக, பொதுமக்கள் கருதுவர். இது, தன் வளர்ச்சியை பாதிக்கும்' என்றும், தினகரன் நினைக்கிறார்.அத்துடன், ரஜினியின் அரசியல் பிரவேசம், மற்ற கட்சிகளைமட்டுமின்றி, தன்னையும் சேர்த்து பாதிக்கும் என்ற பயமும், அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ரஜினிக்கு முன், அம்மா தி.மு.க.,வை துவக்க, தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.
எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கிய ஓராண்டில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில், மாயத்தேவர் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க., மூன்றாமிடமும், எதிர்க்கட்சியாக இருந்த, காங்., இரண்டாம் இடத்திற்கும் தள்ளப்பட்டன. அதன்பின், காங்., கரைந்து போனது. பின், முன்னாள் முதல்வர் அண்ணாவை மையப்படுத்தி, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
தற்போது, ஆர்.கே.நகர் தேர்தலில், அ.தி.மு.க., இரண்டாவதாகவும் , தி.மு.க., மூன்றாமிடதிற்கும் சென்றுள்ளதால், இனி வரும் தேர்தல்களில் இதே நிலைமைதான் தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது என, தினகரன் நினைக்கிறாராம். எதிர்காலத்தில், ஜெயலலிதாவை மையப்படுத்தி தான், அ.தி.மு.க - தினகரன் இடையேதான் பலத்த பொட்டி இருக்குமாம்.