நான் அப்படி சொல்லவே இல்ல...! நான் சொன்னது இதுதான்...! பிரகாஷ்ராஜ் விளக்கம்!

 
Published : Jan 02, 2018, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
நான் அப்படி சொல்லவே இல்ல...! நான் சொன்னது இதுதான்...! பிரகாஷ்ராஜ் விளக்கம்!

சுருக்கம்

Im not saying that ...! This is what I said ...! Prakashraj description!

கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆளவேண்டும் என்று நான் பேசவில்லை என்றும், என்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம், உங்களிடம் பயம் தெரிகிறது என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அப்போது கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது.

பிரகாஷ்ராஜ் கூறியதாக வெளியான இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரகாஷ்ராஜ் குறித்து இணையதளங்களில், நெட்டிசன்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டு கருத்துக்கள் பதிவிடப்பட்டது. நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும் கர்நாடகாவில் வேறுமாதிரியாகவும் பேசி இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளார் என்று  சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என்று தான் சொல்லவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில், தகுதி வாய்ந்த நபர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

கர்நாடகா, தமிழ்நா? ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை எந்த தேர்தல்களிலும் வெற்றிபெற விடமாட்டோம் என்றே பெங்களூருவில் கூறினேன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

என்னுடைய பேச்சை மாற்றி பிரசாரம் செய்து, தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறீர்கள் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!