
’ஓட்டு கேட்க போனா மக்கள் காறிக் காறி துப்புறாங்க. ஓவரா அசிங்கப்பட முடியலை, அதான் விலகிடுறேன்.’....பா.ம.க.வின் மாநில துணை தலைவராக இருந்த மணிகண்டன் இப்படித்தான் குமுறிக் கொட்டிவிட்டு கட்சியிலிருந்து விலகினார். இந்த தகவலை ராமதாஸிடம் சொல்லியபோது, அல்லு தெறிக்க சிரித்தவர், ‘அவன் கதையை தூக்கி குப்பையில போடு.’ என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி எனும் பெயருடன் துவக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாய் தன்னை காட்டினார். பிறகு தானே ஒரு இயக்கம் ஆரம்பித்தார். அப்புறம் ஏதோ ஒரு லிங்கை பிடித்து, உத்திரபிரதேசம் சென்று முலாயம்சிங் யாதவ் உடன் அடிக்கடி சைக்கிளில் சண்டிங் அடித்தார். அகிலேஷ் பெயரை சொல்லி இங்கே என்னவோ செஞ்சு பார்த்தார் ஆனால் பப்பு வேகலை. விளைவு, திடீரென பா.ம.க.வில் சேர்ந்தார். ஆளே இல்லையேன்னு நினைச்சுட்டு இருந்த ராமதாஸும் இவரை சட்டென்று மாநில துணை தலைவராக்கினார்.
மா.து.த. ஆன ஜோரில் அங்குமிங்குமாய் ரவுண்டு விட்டார் மணிகண்டன். ஆனால் வன்னியர்களின் வாக்கு வங்கியே இல்லாத திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்களில் இவரை எவனுமே மதிக்கலை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்து, பிரசாரம் துவங்கிய நிலையில் பா.ம.க. போட்டியிடும் ஏழு தொகுதிகளுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட முயன்றார். சொந்த கட்சியிம் யாரும் பெருசாய் மதிக்கவில்லை. எல்லோருமை இவரை டம்மியாகவே ட்ரீட் பண்ணியிருக்கின்றனர்.
விளைவு, ஒரு பிரஸ்மீட்டை கூட்டி, ”ராமதாஸும், அன்புமணியும் மக்களை சந்திக்கிறதே இல்லை. நாங்கதான் மக்களை சந்திச்சோம். எங்ககிட்டே மக்கள் கேக்குற கேள்விக்கு பதிலே சொல்ல முடியலை. ’அ.தி.மு.க.வை ஊழல் கட்சின்னு சொல்லிட்டு இப்ப ஏன் அங்கே போனீங்க? இனி நீங்கள்ளாம் ஊழலை பத்திபேசாதீங்க, அந்த தகுதி போச்சு. பேரம் பேசி பணம் வாங்கி கூட்டணி வெச்சுட்டு, இப்ப ஓட்டு கேட்டு வர்றீங்களா?’ன்னு காரி காரி துப்புறாங்க. ஓவரா அசிங்கமாவுது. எங்க கிட்டே எதுவும் கேட்காம கூட்டணியை அப்பாவும், மகனுமே முடிவு பண்ணிட்டாங்க. இப்போ இயல்பு நிலையை சொன்னா ஏத்துக்குறதில்லை ரெண்டு பேரும். அதான் விலகுறேன்.” என்றார்.
மணிகண்டன் பா.ம.க.விலிருந்து விலகுவதை, அ.தி.மு.க.வுக்கு எதிரான ஊடகங்கள், பத்திரிக்கைகள் மட்டும் பெரிதாய் காட்டின. மற்றவர்களும், பொதுமக்களும் ‘ஓ இப்படி ஒரு கேரக்டர் அந்த கட்சியில் இருந்தாரா?’ என்று அப்போதான் கேள்வியேபட்டனர். இந்நிலையில் டாக்டர் ராமதாஸிடம் மணிகண்டன் விலகப்போவடதை கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே ஸ்மெல் செய்து சொல்லி, காரணத்தையும் சொன்னபோது அல்லு தெறிக்க சிரி சிரியென சிரித்தாராம்.
பிறகு ‘அந்த டம்மி பீஸு கதையை என்கிட்ட பேசாத. சரியான காமெடி ஃபெல்லோ. கட்சியில இருந்து ஒரு புண்ணியமும் இல்ல, விலகுறதால் நஷ்டமும் இல்லை. அந்த பதவிக்கான கவுரவம் மீண்டுடுச்சு.’ என்றாராம் நக்கலாக. இதை ராமதாஸின் வட்டாரத்தில் மணிகண்டனால் அவ்வப்போது ‘கவனிக்கப்பட்டு’ வைக்கப்பட்டிருந்த ஸ்பை ஒருவர், மணிக்கு போன் போட்டு சொல்ல ‘சத்திய சோதனை’ என்றாராம் மணி. ஹும் எவ்வளவு நாள்தான் சீரியஸ் அரசியலையே பார்க்குறது, நமக்கும் கொஞ்சம் என்டர்டெயின்மெண்ட் வேணுமா இல்லையா!