ஹெச்.ராஜா பேசும்போது வெறுப்பில் டி.வியை உடைத்த கமல்ஹாசன்... அவ்வளவு ஆத்திரமா?

By Thiraviaraj RMFirst Published Apr 12, 2019, 5:42 PM IST
Highlights

வெறுப்பில் டிவியை உடைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் புதிய வகை பிரச்சாராத்தை கடைப்பிடித்துள்ளார். 
 

வெறுப்பில் டிவியை உடைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் புதிய வகை பிரச்சாராத்தை கடைப்பிடித்துள்ளார்.

 

மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தலிலும் 18 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. கமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் உட்பட தேசிய தலைவர்கள் உரையை பார்க்கிறார் கமல்ஹாசன். அவர் கையில் ரிமோட் மட்டும் உள்ளது. பார்க்கும் நமக்கு தலைவர்கள் பேசுவது மட்டும் கேட்கிறது. பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா-வின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோ அதில் வரும் போது, அவர் ’ஆண்டி-இந்தியன்’ என்று சொல்லும் குரல் கேட்கிறது. அதற்கு பிறகு ஆவேசமடையும் கமல் ரிமோட்டை தூக்கி தொலைக்காட்சி மீது வீசுகிறார். திரை உடையும் சத்தம் கேட்கிறது. 

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!

புது வெளிச்சம் பிறக்கட்டும்!

வாக்களிப்பீர் சின்னத்திற்கு.

உங்கள் நான். pic.twitter.com/MUdNCjSsgb

— Kamal Haasan (@ikamalhaasan)

 

பிறகு, கேமரா மூலம் மக்களிடம் பேசும் கமல், பெற்றோர்கள் வழிகாட்டுதலின் பேரில் புதிய வாக்காளர்கள் ஓட்டுபோடலாம். ஆனால் உங்கள் பெற்றோரின் சொல்பேச்சை கேட்காமல், நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் பெற்றோர் சொல் பேச்சை கேளுங்கள். நல்ல அரசை தேர்வு செய்து வாக்களியுங்கள் என்று கூறுகிறார். கமலின் இந்த புதிய ஆவேச பிரசார வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

click me!