வாடிக்கையாளர்களை திருடர் போல் பார்ப்பதா? ராமதாஸ் ஆவேசம்

 
Published : Dec 20, 2016, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
வாடிக்கையாளர்களை திருடர் போல் பார்ப்பதா? ராமதாஸ் ஆவேசம்

சுருக்கம்

வங்கி கணக்கில் பழைய 500 ,1000 ரூபாய் தாள்களை வங்கியில் செலுத்த விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் வாடிக்கையாளர்க்களை குற்றவாளிகள் போல் சந்தேககண்கொண்டு பார்ப்பது போல் இருக்கிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பிஉள்ளார்.

இது பற்றிய அவரது அறிக்கை:

வங்கிகளில் இம்மாத இறுதிவரை ஒரே ஒருமுறை மட்டுமே ரூ. 5 ஆயிரத்திற்கும் மேல் பணம் செலுத்த முடியும்; அவ்வாறு செலுத்த வருபவர்களிடம் வங்கி அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி முழு திருப்தி அடைந்தால் மட்டுமே பணத்தை பெற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல.

 வங்கிக்கு வருபவர்களை வாடிக்கையாளர்களாக பார்க்காமல், குற்றவாளிகளாக நினைத்து விசாரிப்பது முறையல்ல. வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல்நிலையங்களாகவோ, நீதிமன்றங்களாகவோ மாறக்கூடாது. கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில்,  அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத அரசு, ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவறு; இதை கைவிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!