
அரியலூர் திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
சமீபத்தில் காவேரி மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவரை காண சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கார் மீது செருப்புகள் கற்கள் வீசப்பட்டது, தாக்குதல் நடக்க முயன்றது.
இதை ஸ்டாலின் உட்பட பலரும் கண்டித்தனர். ஆனால் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் கடந்த 17 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ வாகனத்தின் செருப்பு வீசி தாக்கப்பட்ட சம்பவத்தை வரவேற்று அறிக்கை விட்டார்.
அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கரின் இந்த செயலை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிவசங்கருக்கு எதிராக கோசமிடப்பட்டது.