மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ரத்து.! மீண்டும் செயல்படுத்தாவிட்டால் போராட்டம் - ராமதாஸ் எச்சரிக்கை

Published : Nov 18, 2022, 01:06 PM IST
 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ரத்து.! மீண்டும் செயல்படுத்தாவிட்டால் போராட்டம் - ராமதாஸ் எச்சரிக்கை

சுருக்கம்

புதுவையில் ரத்து செய்யப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இட ஒதுக்கீடு ரத்து

புதுவையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தாவிட்டால் களத்தில் இறங்கி போராட உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும் என தெரிவித்துள்ளார்.  இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது! புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். 

வன்முறைக்கு காரணமே கே.எஸ் அழகிரி தான்..! தலைவர் பதவியில் இருந்து நீக்கிடுங்க..! காங்கிரஸ் நிர்வாகி போர்கொடி

களத்தில் இறங்கி போராட்டம்

புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி என தெரிவித்துள்ளார், எனவே  வாக்களித்த மக்களை  ஏமாற்ற நினைக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின்  சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா.... நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்! என புதுவை மாநில அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தெலுங்குத் திரைப்படங்களை வெளியிடவிடமாட்டோம் .! விஜயின் வாரிசு படத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய சீமான் எச்சரிக்கை
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!