தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு..! விவசாயிகள் பாதிக்க வாய்ப்பு.? அலறி துடிக்கும் ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Dec 23, 2022, 11:35 AM IST
Highlights

விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் தமிழர் திருநாளையொட்டி,  அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு  தமிழக அரசு அளிக்கவிருக்கும் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது கரும்பு உழவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும்! தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே  பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுக திட்டத்திற்கு நம்ம ஸ்கூல் என நாமகரணம் சூட்டிய திமுக.! ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு 3 கோடியா.? இபிஎஸ்

விவசாயிகள் பாதிப்பு

நடப்பாண்டும் அதே நடைமுறையே தொடரும்; அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான ஏக்கரில் உழவர்கள்  பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்!  பொங்கல் கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. பொங்கலுக்கு இன்னும்  3 வாரங்களே உள்ள நிலையில் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால்  விதை வாங்கிய செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது!

அச்சுறுத்தும் கொரோனா.! தடுப்பூசி கையிருப்பில் இல்லை.! தயார் நிலையில் தமிழக அரசு..!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரும்பு கொள்முதல் செய்திடுக

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் கடந்த ஆண்டு குளறுபடிகள் நடந்தது உண்மை.  அதற்கு நிர்வாகத்தில் நடந்த தவறுகள் தான் காரணம் ஆகும். அதைக் காரணம் காட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவதை நிறுத்தியதால், உழவர்கள் தான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்! ஜனவரி 2-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பை அரசு சேர்க்க வேண்டும். ஒரு கரும்பு ரூ.35 என்ற விலையில் தமிழக அரசே உழவர்களிடமிருந்து நேரடியாக பொங்கல் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம் உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்! என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜகவில் இணைய போறேனா..! அலறி துடித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்

click me!