இந்தியாவின் சமூகநீதித் தொட்டில் தமிழ்நாடு.!துரு பிடித்துப் போனதால் ஆட மறுக்கிறதா.?திமுக அரசை விளாசும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Nov 19, 2023, 1:09 PM IST

சமூகநீதி இப்போது பிகார், கர்நாடகத்தில்  தொடங்கி இந்தியா முழுவதும் பிரசவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல மாநிலங்களிலும் கருக் கொள்கிறது! ஆனால், சமூகநீதியின் தாய் என மார்தட்டும் தமிழ்நாட்டின் வயிறு  வாடிக் கொண்டிருக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


சாதி வாரிகணக்கெடுப்பு

பிகார் அரசைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசும், கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றன. தமிழக அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமாக சாதி வாரி மக்க்ள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே  தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் சமூகநீதித்  தொட்டில் தமிழ்நாடு. நூற்றாண்டுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இந்தியாவுக்கான சமூகநீதி தமிழ்நாட்டில் பிறந்ததால் தான்  இந்த பெரும்பெயர் நமக்கு! 

சமூக நீதி தொட்டில்- துரு பிடித்துக் கிடந்தது

இரண்டாம் தலைமுறை சமூகநீதி இப்போது பிகார், கர்நாடகத்தில்  தொடங்கி இந்தியா முழுவதும் பிரசவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல மாநிலங்களிலும் கருக் கொள்கிறது! ஆனால், சமூகநீதியின் தாய் என மார்தட்டும் தமிழ்நாட்டின் வயிறு  வாடிக் கொண்டிருக்கிறது, அதன் கருப்பையோ  காய்ந்து கொண்டிருக்கிறது! காரணமான ஆட்சியாளர்களுக்கோ கவலை இல்லை!

தமிழ்நாடு என்ற தொட்டிலில் சமூகநீதியாவது இருக்கிறதா? என  எட்டிப் பார்த்தேன். அது ஆடாமல் காலியாகக் கிடந்தது. இரும்புக் கட்டில் என்பதால் ஆட மறுக்கிறதோ?  என்று ஆட்டிப் பார்த்தேன். அந்தத் தொட்டில் துரு பிடித்துக் கிடந்தது! என ராமதாஸ் பதிவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

அமைச்சராக தொடருவதில் செந்தில் பாலாஜிக்கு செக்.! உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் புதிய சிக்கல்
 

click me!